சுதந்திரப் பறவைகள்

paravaiமனைவி ஊருக்குச் சென்றுவிட்டால் பெரும்பாலான   கணவன்மார்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கலாம்.இங்கே “பெரும்பாலான” என்பதில் நீங்கள் என்னையும் சேர்த்துக்கொள்ளலாம் . மனைவி பக்கத்தில் இல்லை என்றால் நாம் பெரிய தவறேதும் செய்துவிடப் போவதில்லை என்றாலும் சுதந்திரப் பறவையாய் இருப்போமல்லவா அதற்காகத்தான் அந்தத் துள்ளல்.சரி அப்படியென்ன சுதந்திரம் என்றால் வெளியில் நம் இஷ்டத்திற்கு ஹோட்டலில் சாப்பிடுவதில் இருந்து வீட்டில் அதிக நேரம் பேஸ்புக்கில் இருப்பது வரை அனைத்தும் சுதந்திரம்தான்.மனைவி இருக்கும்பொழுது ஹோட்டலில் சாப்பிடுவதாக இருந்தால் கூட திருட்டுத்தனமாகத்தான் செய்ய முடிகிறது.”வீட்டுல இங்க ஒருத்தி கஷ்டப்பட்டு ஒடம்பு கெட்டுப் போயிரும்னு சமைச்சு வச்சா நீங்க வெளியில போயி சாப்பிடுறீங்களா” என்ற கேள்வி கேட்டால் எந்த ஆம்பிளை ஹோட்டலில் சாப்பிட்டதை வீட்டில் வந்து மனைவியிடம் சொல்லுவான்.அதே மனைவி இல்லை என்றால் தன் இஷ்டப்படி எங்கே வேண்டுமானாலும் சாப்பிடலாம். “எப்பப் பாத்தாலும் உங்களுக்கு இந்த பேஸ்புக்குதானா , நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா இல்ல இந்த பேஸ்புக்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா” போன்ற கேள்விகள் எல்லாம் மனைவி ஊருக்குச் சென்ற நாட்களில் நம் காதுகளுக்கு எட்டாது.மணிக்கணக்கில் பேஸ்புக்கில் விளையாடலாம்.தட்டிக்கேட்கவும் , அதட்டவும் மனைவியார் பக்கத்தில் இருக்க மாட்டார்.அதுவும் சுதந்திரம்தான்.

“அட என்னப்பா அப்படி என்ன உன்னை உன் மனைவி கொடுமைப் படுத்துகிறார்” என்றுகூட உங்களை உங்கள் நண்பர்கள் கேட்டிருப்பார்கள்.இங்கே “சுதந்திரம்” என்று நான் குறிப்பிட்டது கொடுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நான் குறிப்பிடுவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.நான் குறிப்பிட்ட சுதந்திரம் என்பது எந்தவொரு கமிட்மெண்ட்டும் இல்லாமல் இருக்கலாம் அல்லவா அதைத்தான்.அதற்காக “திருமணம் செய்தால் நீங்கள் அடிமை ஆகிவிடுகிறீர்களா என்ன” என்று சண்டைக்கு வந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.மேலே குறிப்பிட்ட சுதந்திரங்கள் தவிர , நட்பு வட்டத்தைச் சந்திப்பது , அவர்களுடன் வெளியில் செல்வது என்று நிறைய வேலைகளில் சுதந்திரம் இருக்கும்.மனைவி இருக்கும் பொழுது நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்ற கமிட்மெண்ட் இருக்குமல்லவா.சரி , இந்த சுதந்திரம் எல்லாம் எத்துனை நாட்களுக்கு நமக்கு இனிக்கும் என்றால் ஒரு மூன்று நான்கு நாட்களுக்குத்தான்.ஐந்தாவது நாளில் இருந்து மனைவி அருகில் இல்லாத குறையை நிச்சயம் நாம் உணரத் தொடங்குவோம்.அருகில் இருக்கும் போது உறவுகளின் முக்கியத்துவம் நமக்குத் தெரிவதில்லை.அவர்களைப் பிரிந்து சில நாட்கள் இருந்து விட்டால் போதும் உறவுகளின் அருமை புரிந்துவிடும்.என்னதான் ஹோட்டலில் சாப்பிடுவதை விரும்பினாலும் அதுவும் கூட மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு வெறுத்துப்போய்விடும்.

சரி , வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம் என்று நினைத்து அதைச் செய்தால் அங்குதான் விழுகிறது ஒரு பெரிய வெடிகுண்டு.ஆண்களில் சிலர் சமையலில் கலக்குபவர்கள் என்றாலும் என்னைப் போன்ற  பலரின் நிலை பரிதாபத்திற்கு உரியதுதான்.அரிசியை குக்கரில் வைத்து எத்துனை டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று மனைவிக்கு போன் செய்து கேட்பதில் இருந்து ஆரம்பமாகிறது நமது கிச்சன் அட்டகாசம்.பிறகு ஒவ்வொன்றிற்கும் மனைவியிடம் போன் செய்து “அது எங்கே இருக்கிறது , இது எங்கே இருக்கிறது” என்று கேட்டும் , செய்முறை விளக்கங்களை மீண்டும் மீண்டும் கேட்டுச் செய்தாலும் நாம் சமைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவார்களா என்ற கேள்வி சந்தேகத்திற்கு இடமின்றி வந்துவிடுகிறது.அப்படியே நாம் சமைத்ததை சாப்பிட பாசக்கார நண்பன் எவனாவது வீட்டிற்கு வந்துவிட்டால் அடுத்த முறை மீண்டும் வீட்டிற்கு வருவது சந்தேகமே. இது இப்படியென்றால் சமைத்த பாத்திரங்களை கழுவி வைப்பது நமக்கு அளிக்கப்பட்ட சாபத்தைப் போன்றதுதான். இப்படித்தான் போராடி போராடி மனைவி வரும் வரை நாட்களை ஓட்ட வேண்டியிருக்கிறது.பெருமைக்காக வேண்டுமானால் “ஐ ஏம் பேச்சிலர்” என்று தம்பட்டம் அடிக்கலாமே தவிர உண்மை நிலை வேறு.

நமது ஒவ்வொரு தேவையையும் அம்மாவிற்குப் பிறகு பார்த்துப் பார்த்துச் செய்பவள் மனைவி.நமக்கு எந்த உணவு பிடிக்கும் என்பதில் இருந்து இரவு தூங்கும் முன்பு குடிக்கும்  பாலில் எத்துனை ஸ்பூன் சர்க்கரை போட வேண்டும் என்பது வரை ஒவ்வொரு விசயத்திலும் அம்மாவின் அதே அக்கறை மனைவியிடம்.ஹோட்டல்காரனிடம் சென்று எனக்கு உப்பு குறைவாக சாம்பார் இருக்க வேண்டும் என்று கேட்கமுடியாது.வீட்டில் அதை மனைவி பார்த்துக்கொள்வாள்.இங்கே கணவன்மார்கள் மனைவி இல்லாதபோது சந்தோசப்படுவதன் காரணம் தங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம் , மனைவி இருக்கும் பொழுது அவளையும் சார்ந்தே நமது விருப்பு வெறுப்புகளும் உள்ளது என்பதே.மற்றபடி தன்னைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும் மனைவியைப் பெற்ற ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள்தான்.  இன்றைக்கு விவாகரத்துகள் பெருகி வரும் நிலையில் , கணவன் மனைவிக்குள் சண்டை வந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குச் செல்வதையும் பார்க்கலாம்.சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரே அலுவலகத்தில் பணி புரிந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்று உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவமும் இருக்கிறது.

கணவன் மனைவிக்குள் சிறு பிரச்சனைகள் , கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொண்டு விட்டுக்கொடுத்து இல்லறத்தைத் தொடர வேண்டுமே தவிர , தங்கள் வாழ்க்கையை சீரழிப்பதோடு இல்லாமல் குழந்தைகளின் வாழ்க்கையையும் சீரழிப்பது முட்டாள் தனம்.”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்பதும் “தாய்க்குப் பின் தாரம்” என்பது நிதர்சனமான உண்மை.மீண்டும் சந்திப்போம்.

————- கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to சுதந்திரப் பறவைகள்

  1. அருமை. வாழ்த்துகள்.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s