முதல் பிரசவம்

1234முகநூல் வந்து தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது எனக்கு.இப்படி தீவிரமாக இயங்கியெல்லாம் கோட்டையைப் பிடித்துவிடவா போகிறோம் , இல்லைதான்.இருந்தாலும் வாசிப்பில் நேரம் போவது தெரிவதே இல்லை.நானெல்லாம் எந்தவொரு பத்திரிக்கைக்கும் எதையும் எழுதிப் போட்டவன் இல்லை , நாம் அனுப்பியது பிரசுரம் ஆகுமா , ஆகாதா என்றெல்லாம் காத்திருந்தவனுமில்லை.இளமைக் காலங்களில் கவிதை எழுதி யாரையும் கொலை செய்தவனுமில்லை.அலுவலகத்தில் ஏதாவது முக்கியமான மெயில் அனுப்பவேண்டும் என்றால் கதை கதையாக எழுதி வாசிப்பவரை கொலை செய்தவன் என்ற பெருமை மட்டும் எனக்குண்டு.அந்தப் பெருமை தந்த கர்வம்தான்(இந்த வார்த்தைதானே  சரியாக இருக்கும்) இங்கே முகநூலில் எழுதும்படி ஆகிவிட்டது.வாசிப்பை எடுத்துக்கொண்டாலும் அதிக இலக்கியங்களோ , புத்தகங்களோ வாசித்தவனில்லை நான்.ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன் வகையறாக்கள் மட்டுமே இளமைப் பருவத்தில் நான் வாசித்தவை.முகநூல் வந்து ஒரு வருடம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது.எழுத ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்கள் இருக்கும்.இங்கே வந்த பிறகுதான் வாசிப்பு பழக்கம் அதிகரித்திருக்கிறது.நிறைய எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பார்த்து நாமும் எழுதித் தள்ளுவோம் என்ற இக்கட்டான முடிவெடுத்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.

நண்பர்கள் என்றால் உசுப்பேத்திவிடத்தானே செய்வார்கள் , செய்தார்கள்.ஆனால் , அவர்கள் உசுப்பேத்தி விட்டதன் விளைவு ஒரு ப்லாக் உருவாக்கி எழுதும் அளவிற்கு ஆர்வத்தைக் கொடுத்துவிட்டது.குறைந்தது ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று கட்டுரைகள் மட்டுமே எழுத முடிகிறது.அலுவலகப் பணிக்கிடையில் இதைச் செய்வதே எனக்கு சவால்தான்.இதற்கிடையில் பத்து நாட்களுக்கு ஒரு முறை ஊருக்குச் சென்று வர வேண்டும்.ஆக , இரண்டு மூன்று என்பது மட்டுமே எனக்கு நானே வகுத்துக்கொண்ட ஒரு எல்லை.சரி , நீயெல்லாம்  எழுதி எதைக் கிழிக்கப் போகிறாய் என்று கூட மறைமுகமாக சிலர் கேட்டுவிட்டார்கள்.அதற்காக அவர்களிடம் நான் கோபம் கொள்ள முடியுமா என்ன.அது எனக்குத் தேவையும் இல்லை .காரணம் , நான் யாரிடமும் என்னை “எழுத்தாளன்” என்று சொன்னதும் இல்லை , நான் அப்படியும் இல்லை.அந்த இடத்தை அடைய மண்டையில் மசாலா நிறைய இருக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.என் உயரம் என்னவென்று அறிந்தவன் நான். நான் எழுதுவது என் மன திருப்திக்காக மட்டுமே.அதை வாசித்து கருத்துச் சொல்ல எனக்கு உறுதுணையாய் சில நண்பர்கள் இருப்பதால்தான் இன்னும் எழுத வேண்டும் என்று சென்றுகொண்டிருக்கிறது எழுத்துலக வாழ்க்கை.

எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு இலக்கியம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால்  இங்கே என்னைப் போல் பலர் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.அனுபவம்தான் எழுத்து.வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கின்றோம்.அவர்களிடம் இருந்து நமக்கான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொள்கின்றோம்.அனுபவங்களோடு சேர்த்து நடப்பு சமாச்சாரங்களையும் சேர்த்தால் யார் வேண்டுமானாலும் எழுதலாம்.அப்படித்தான் எனக்கும் எழுத வந்தது.சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை மக்கள் முன்னால் வைக்கின்றோம் , முடிந்த அளவுக்கு நமக்குத் தெரிந்த தீர்வைச் சொல்கின்றோம் , மற்றவர்களுக்கு உதவும் என்று நினைக்கும் கருத்தைச் சொல்கின்றோம் , சொல்கின்றேன்.தட்ஸ் ஆல்.மனத் திருப்திக்காகச் செய்கின்றேன்.இப்பொழுது அது  இன்னும் ஒரு படி மேலே சென்று நாவல் எழுதும் ஆர்வத்தைக் கொடுத்துவிட்டது.நாவல் என்றால் சாஹித்ய அகாடமி ரேஞ்சிற்கு எல்லாம் இல்லை.100 முதல் 120 பக்கங்களில் ஒரு குறு நாவல் எழுதலாமா என்ற எண்ணம் வரக்காரணமும் சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தின் தாக்கம்தான். புத்தகம் எழுதி ஒரே இரவில் பிரபலம் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் எழுத முடிவெடுக்கவில்லை.என் மனத்  திருப்திக்காகவும் , என்னால் முடிந்த நல்ல விசயங்களை சமூகத்திற்குச் சொல்லலாம் என்ற எண்ணத்தால்தான்.

ஸோ , இதுதான் சமாச்சாரம்.குறு நாவல் எழுதலாம் என்று முடிவு செய்தாகிவிட்டது.வரும் வெள்ளியன்று பிள்ளையார் சுழி போட்டுவிடவும் முடிவு செய்தாகிவிட்டது.குடும்ப உறவுகளைப் பற்றியும் , உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியுமே நாவல் இருக்கும்.என்னை வளர்த்து ஆளாக்கிய கொங்குப் பகுதியைச் சுற்றியே கதை நகரும்.இதை இங்கே அறிவிப்பதற்கு காரணமும் இருக்கிறது. ஒரு இலக்கை அடைய வெறும் இலக்கு மட்டும் இருந்தால் போதாது.இந்த தினத்தில் இதை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் நாமும் அந்த இலக்கை நோக்கி வேகம் காட்டுவோம்.இல்லையேல் , நாளைக்குச் செய்யலாம் , நாளை மறுநாள் செய்யலாம் என்று நாட்கள் நகர்ந்துவிடும்.அதன் காரணமாகவே இந்த நிர்பந்தம்.இது நானாகவே எனக்கு ஏற்படுத்திக்கொண்டது.அதனால்தான் இந்த அறிவிப்பும் கூட. வரும் வெள்ளியன்று தொடங்கி அடுத்த ஐந்து/ஆறு மாதத்தில் இந்த குறு நாவலை எழுதி முடிக்கத் திட்டம்.திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.முதல் பிரசவம்  என்ற எதிர்பார்ப்பு எப்படி ஒரு தாய்க்கு இருக்குமோ அதே எதிர்பார்ப்புத்தான் இப்பொழுது என்னிடமும்.ஆனால் , ஒருவித பதட்டமும் இருக்கத்தான் செய்கிறது.”அடிச்சு நொறுக்குடா கைப்புள்ள”  என்ற மைண்ட் வாய்சும் கேட்பதால் அந்த பதட்டம் கொஞ்சம் குறையவும் செய்கிறது.உங்கள் வாழ்த்துகளோடு விடை பெறுகின்றேன்.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

11 Responses to முதல் பிரசவம்

 1. sivahrd says:

  all the best kathir. do well.
  any help u need, get in touch. i am always there.

  Liked by 2 people

  • மிக்க மகிழ்ச்சிங்க சிவா.தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தைத் தருகிறது.தங்களுக்கு நன்றிகள்.

   Liked by 1 person

   • Ravi says:

    உங்கள் எழுத்துக்களை கவணிக்க காத்திருக்கிறேன் மாமா….வாழ்த்துக்களுடன் ரவி

    Liked by 1 person

 2. வாழ்த்துகள்

  Liked by 1 person

 3. அனைவருக்கும் நன்றிகள்

  Like

 4. raja nataraj says:

  All the best anna…

  Liked by 1 person

 5. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  Liked by 1 person

 6. DD says:

  தலைப்பை பார்த்ததும் உங்கள் பையனை பற்றியது என்று நினைத்தேன். ஆனால் எழுத்தை பற்றியது என்று படித்ததும் புரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள் சுவாரசியமாக எழுதுங்கள்.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s