குழந்தை ஒரு சைத்தானா ?

Anbaana Petrogal“சைத்தான்” என்று தன் மகனை திட்டிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.இத்துனைக்கும் அந்தப் பையன் பெரிய தவறேதும் செய்யவில்லை.இந்த இடத்தில் எனக்கு கோபம் வந்தது என்று சொல்வதை விட நமக்குக் கோபம் வரும் என்பதுதான் சரியாக இருக்கும் .அவரது பிள்ளையை அவர் திட்டுகிறார் அதில் உங்களுக்கு என்ன அக்கறை என்று கூட சிலர் கேட்கக்கூடும்.யாருடைய குழந்தையாக இருந்தால் என்ன , குழந்தைகள் கடவுளுக்கு சமமானவர்கள் அல்லவா , அந்த அக்கறைதான் என்று சொல்வேன்.பொது இடத்தில் வைத்து இப்படித் திட்டினால் யாருக்குத்தான் கோபம் வராது சொல்லுங்கள்.ஒரு பொது இடத்திலேயே குழந்தையை இப்படித் திட்டுபவர் வீட்டில் குழந்தையை எப்படி வளர்ப்பார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.தப்பு செய்யும் குழந்தையைக் கூட திருத்தும் விதத்தில்தான் திருத்த வேண்டும்.நமது முரட்டுத் தனத்தை குழந்தைகள் மேல் காட்டினால் நம்மீது வெறுப்புத்தான் வருமே தவிர பாசம் கேள்விக்குறிதான்.என் பெற்றோர்கள் என்னை கண்டிப்புடன் வளர்த்தார்கள் என்று பிள்ளைகளையும் அதே அடக்கு முறையில் வளர்க்கும் பெற்றோர்கள் நிறையப் பேரை பார்க்கலாம்.தங்கள் பெற்றோர்கள் செய்த அதே தவறை தாங்களும் பெற்றோரான பிறகு செய்ய வேண்டும் என்றில்லை.இன்றைக்கெல்லாம் குழந்தைகளுக்கு அடக்குமுறை வைத்தியம் சிறிதளவும் பலனளிக்காது.அந்த காலகட்டம் வேறு இன்றைக்கு நிலைமை வேறு.குழந்தைகளின் வழியிலேயே சென்று சரியான வழியைக் காட்டுவதே இன்றைக்கு எடுபடும்.வீராப்பும் , வைராக்கியமும் குழந்தைகளிடத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றம் நிச்சயம்.

அதற்காக குழந்தைகளை அவர்கள் இஷ்டப்படி விட்டுவிடலாமா என்ன என்ற கேள்விகூட வரும்.முடியாது.அதற்காக குழந்தையை விரட்டி விரட்டி அடித்துத்தான் தவறை உணர்த்தவேண்டும் என்பதில் பலருக்கும் உடன்பாடு இருக்காது.பக்கத்து வீட்டுப் பிள்ளையும் , நம் பிள்ளையும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.பக்கத்து வீட்டுப் பையன் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி விடுகின்றான்.நம் பிள்ளை அவனை விட குறைவான மதிப்பெண் வாங்கும் பொழுது , பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் நம் குழந்தையை ஒப்பிட்டு , “பாருடா , அவன் எப்படி முதல் மதிப்பெண் வாங்கி இருக்கின்றான் , நீயும் இருக்கிறாயே” என்று மட்டும் சொல்லிவிட்டால் அதை விட பெரிய முட்டாள்தனம் இருக்கவே முடியாது.அப்படிச் செய்கையில் குழந்தைகள் படிப்பில் இன்னும் பின்தங்கவே செய்வார்கள்.”கவலைப் படாதே , இந்த முறை அவன் உன்னை விட அதிக மதிப்பெண் வாங்கி விட்டான் என்பதால் நீ தோற்றுப் போய்விட்டதாக அர்த்தம் இல்லை , முயற்சி செய் அடுத்த முறை நிச்சயம் நீ அவனை விட அதிக மதிப்பெண் எடுக்கலாம்” என்று மட்டும் சொல்லிப்பாருங்கள் முதல் மதிப்பெண் எடுக்கின்றானோ இல்லையோ அவனிடத்தில் தன்னம்பிக்கை பிறக்கும்.பெற்றோர்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும். அதன் பலனாக அடுத்த முறை நிச்சயம் தேர்வில் மதிப்பெண் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படிச் செய்தும் மதிப்பெண் உயரவில்லை என்றால் இன்னும் கூட குழந்தைகளை அன்பாக வழியில் அரவணைத்துச் செல்ல வேண்டும்.படிப்பைப் பொறுத்த வரை அடித்தோ , திட்டியோ எந்தக் குழந்தைக்கும் மதிப்பெண்கள் வரவைக்க முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.விளையாட்டைப் பொறுத்த வரை பெற்றோர்களே அதிக நேரம் விளையாட விடுவதில்லை.அதிலும் , குழந்தை மண்ணில் விளையாடிவிட்டால் அவ்வளவுதான்.பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை மண்ணில் விளையாட விடுவது தவறு என்றுதான் நினைக்கின்றார்கள்.நாமெல்லாம் குழந்தையாக இருந்தபொழுது மண்ணில் விளையாட வில்லையா என்ன ? இன்றைக்கு நாகரீகம் வளர்ந்துவிட்டதால் , பீசாவும் பர்கரும் சாப்பிடுவதை விரும்பும் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டு விசயத்தில் சற்று பின்தங்கியே உள்ளனர்.அதிலும் மண்ணில் விளையாடுவது நிறையப் பேருக்கு தீண்டத்தகாத செயலைப் போன்றது. விளையாட்டைப் பற்றி இங்கே குறிப்பிட்டதன் காரணம் மேலே “சைத்தான்” என்று நான் குறிப்பிட்டது ஒரு குழந்தை மண்ணில் விளையாடியபொழுது தன் அன்பு அம்மாவால் அப்படி அழைக்கப்பட்டதால்.

குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களிடத்தில் பெற்றோர்கள் நண்பர்களாகப் பழக வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.அது மாறும் பட்சத்தில் பெற்றோர்களுடனான அவர்களுடைய நெருக்கமும் குறைகிறது.எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும் அன்பால் மட்டுமே குழந்தைகளைத் திருத்த முடியுமே தவிர அடக்குமுறையால் எந்த வித பலனும் கிடைக்காது என்பதற்கு வாழும் உதாரணங்களாக நிறையப் பேரை நாம் அவ்வப்பொழுது பார்க்கலாம்.இவன் என்னடா பெரிய அறிவாளியைப் போல் பேசுகின்றான் என்று நினைப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.நானும் கூட ஆரம்பத்தில் ஒரு சமையம் மகனிடம் கண்டிப்புடன் இருந்தவன்தான்.கண்டிப்பு என்றால் “சைத்தான்” என்று சொல்லக்கூடிய அளவிற்கான கண்டிப்பில்லை என் கண்டிப்பு.கொஞ்சம் திட்டுவதோடு என் கண்டிப்புகள் முடிந்துவிடும். ஆனால் , அதில் எந்த பலனும் நான் பெறவில்லை.மகனுடன் என் அணுகுமுறையை இப்பொழுது மாற்றிக்கொண்டேன் , அதற்கான ரிசல்டும் நல்லபடியாக இருக்கிறது.குழந்தைகளிடத்தில் ஒரு நண்பனைப் போலவே நடந்துகொள்ள ஆசைப்பட்டு அதன்படியும் நடந்துகொண்டுதான் வருகின்றேன்.அந்த அனுபவத்தில் மட்டுமே இந்தப் பதிவே தவிர என்னை நான் சிறந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு அல்ல.

குழந்தைகளை நல்ல பண்புடனும் , மற்றவர்களை மதிக்கக்கூடியவர்களாகவும் வளர்ப்பது முழுக்க முழுக்க பெற்றோர்களின் கடமை.வெறும் கல்வி மட்டுமே ஒருவனை சிறந்தவனாக்கி விட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொண்டாலே போதும் , பிற்காலத்தில் நம் குழந்தைகள் நிச்சயம் சிறந்தவர்களாக வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.மீண்டும் சந்திப்போம்.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s