சாதிக்கப் பிறந்தவர்கள்

Handicapped Auto Driver Imagesபடித்து முடித்துவிட்டால் உடனே அம்பானி ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் நிறையப் பேரிடம் வந்துவிடுகிறது.சிலருக்கு படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிடுகிறது , சிலருக்கு கொஞ்ச காலம் ஆகிவிடுகிறது.சம்பளம் குறைவான வேலைக்கெல்லாம் போவதற்கு பல இளைஞர்களுக்கு மனமில்லை.அவர்கள் திறமை மேல் குற்றம் சொல்லவில்லை.சம்பளம் குறைவாக இருந்தாலும் முதலில் அதில் சேர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அம்பானியெல்லாம் எடுத்த எடுப்பிலேயே வானில் பறக்கவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.நாம் வாழ்க்கையில் முன்னேறியவர்களை மட்டும் மனதில் வைத்துக்கொள்கின்றோமே தவிர அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதை மறந்துவிடுகின்றோம்.எல்லோருக்கும் அம்பானியாக ஆசை இருக்கும்.ஆனால் , அப்படிப்பட்ட இடத்தை அடைய ஒவ்வொரு படிக்கட்டாகத்தானே செல்ல வேண்டும்.என் தகுதிக்கேத்த வேலை கிடைக்கவில்லை , அதனால் நான் வேறு வேலை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று சொல்பவர்கள் நிறையப் பேர்.தகுதி என்பது எந்தவொரு வேலைக்குச் சேர்வதற்கு முன்பும் தீர்மானிக்கப்பட்டு விடாது.வெறும் மதிப்பெண்கள் மட்டுமே ஒருவருடைய முழுத் தகுதியை சொல்லிவிட முடியாது.குறைந்த சம்பளமாக இருந்தாலும் அந்த வேலையில் சேர்ந்து தங்கள் திறமையையும் , தகுதியையும் வளர்த்துக்கொள்வதே சிறந்தது.படித்த பல இளைஞர்கள் டீக்கடை பெஞ்சுகளில் நேரத்தை வீணாக்குவது அவர்களுக்கு வேண்டுமானால் உறுத்தலாக இல்லாமல் இருக்கலாம்.அவர்களைப் பெற்றவர்கள் பாவப்பட்டவர்கள். அப்படிப்பட்ட இளைஞர்களுக்கான கட்டுரைதான் இது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நானும் , மனைவியும் திருநள்ளார் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி மடிவாளா சென்று பேருந்தைப் பிடிக்க ஆட்டோ பிடித்தோம்.ஆட்டோவை ஓட்டியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்.”ஸார் , நான் மீட்டர் போடுறேன் , மீட்டருக்கு மேல் பத்து ரூபாய் மட்டும் சேர்த்துக்கொடுங்கள் ” என்றார்.இரவு நேரம் என்பதாலும் , அவர் அதிகம் கேட்காததாலும்  சரியென்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினோம்.நாங்கள் ஏறிய இடத்தில் இருந்து எங்கள் பயணம் பத்து நிமிடம்தான்.அந்த பத்து நிமிடத்தில் ஆட்டோ டிரைவரைப் பற்றிய வரலாறு தெரிந்துவிட்டது.

அவருக்கு கால் ஊனம்.அதுவும் கூட ஆட்டோவில் ஏறும் முன்பு எங்களுக்குத் தெரியவில்லை.அவரே சொன்ன பிறகுதான் தெரிந்தது.அவருடன் கன்னடத்தில் பேச்சுக்கொடுத்துக்கொண்டே சென்றேன்.மனைவிக்கு கன்னடம் தெரியாது என்பதால் நான் பேசும் அரை குறை கன்னடத்தைப் பார்த்து ரசித்தவாறே வந்தார் என்பது கொசுறுச் செய்தி.அந்த ஆட்டோவை ஓட்டியவர்தான் அதற்குச் சொந்தக்காரரும் கூட.ஊனம் என்றால் இரண்டு கால்களும் ஊனம்.எப்படி மனிதர் டிரைவிங் செய்கிறார் என்பது ஆச்சரியம்.அதிலும் அறுபது வயதில் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். மனிதர் காலை ஆறு மணிக்கு வீட்டில் இருந்து காலை உணவு , மதிய உணவு எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார் ஆட்டோவுடன்.வீட்டில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் தினமும் அவருக்கு காலை/மாலை வாடகை நிரந்தரமாக ஒரு பெண்மணி  கொடுத்திருக்கிறார்.அங்கிருந்து ஆரம்பிக்கிறார் அவர் பணியை.அவரை ஏற்றிக்கொண்டு போய் அவரது அலுவலகத்தில் விடும்பொழுது நேரம் காலை எட்டு மணி.பின்பு அங்கிருந்து கிளம்பி தான் பணிபுரியும் கர்நாடகா சட்டசபைக்கு(விதான் சவ்தா) ஆட்டோவுடன் வந்துவிடுகிறார்.மாலை நான்கு மணி வரை அங்குதான் வேலை இவருக்கு.அரசாங்க வேலை.

தான் ஓய்வுபெற இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகச் சொன்னார்.நான்கு மணிக்குக் கிளம்பி காலையில் விட்டுவிட்டு வந்த அந்தப் பெண்மணியை அவர் அலுவலகத்தில் ஏற்றிக்கொண்டு அவர் வீட்டில் ஐந்து மணிக்கு விட்டுவிடுகின்றார்.ஐந்து மணியில் இருந்து இரவு பத்து மணி வரை வாடகைச் சவாரிதான்.கடின உழைப்பு அறுபது வயதில்.பத்து மணிக்கு வீட்டிற்குச் சென்று உணவருந்திவிட்டு ஆறு மணி நேரம் தூங்குகிறார்.பின்பு காலையில் மீண்டும் தன் தொழிலையும்/அரசாங்க வேலையையும் பார்க்கச் சென்று விடுகின்றார். இவை அனைத்தும் அந்த சில நிமிடங்களில் அவர் என்னிடம் சொன்னது.ஆட்டோவில் இருந்து நான் கீழே இறங்கிய பிறகுதான் அவருடைய கால்களைப் பார்த்தேன்.அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டும் , கை கொடுத்துவிட்டும் ,  பல இளைஞர்கள் உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாலும் அவரைப் பற்றியே ஒரு மணி நேரம் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

இது இப்படியென்றால் அடுத்த நாள் காலையில் திருநள்ளாரில் கண்ட காட்சி எரிச்சலைத் தந்தது.ஒரு பெண் வாசிக்கிறார் , அதற்கு தகுந்தாற்போல் ஐம்பது வயதிற்கு மேலான ஆண் தன் கையில் வைத்திருக்கும் சவுக்கால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு ஆடுகிறார்.பின்பு , தன்னுடைய உடம்பில் ரத்தம் வருவதைக் காண்பித்து அங்கிருப்பவர்களிடம் வயிற்றுப் பிழைப்பிற்கு பணம் கேட்கிறார்.உடம்பில் உண்மையிலேயே ரத்தம் வருகிறதா இல்லை அது நாடகமா என்று தெரியாது.இருந்தாலும் அதுதான் பிழைப்பு என்றால் மேலே குறிப்பிட்ட ஆட்டோக்காரரை அவமானப்படுத்தியதாக அமைந்துவிடும்.படிப்பே இல்லையென்றாலும் பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றதே , இப்படி தங்களை வருத்திக்கொண்டு நடத்தும் பிழைப்பு தேவையா என்பது கேள்வியாகிறது.

சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்படுவது ஒன்றும் தவறில்லை.ஆனால் , அதற்கான அடித்தளம் என்பது எளிதில் அமைத்துவிட முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.தான் பெற்ற பிள்ளைகள் வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும் அறுபது வயதிலும் இன்னும் தன் வியர்வையை சிந்திக்கொண்டுதான் இருக்கிறார் இந்த ஆட்டோக்காரர்.இவரைப் போன்றவர்களைப் பார்த்தாலாவது சில இளைஞர்கள் திருந்தக்கூடும் என்ற ஆதங்கம் வருகிறது.“வானம் ஏறி நீ வைகுந்தம் காட்டுவது இருக்கட்டும், முதலில் கூரையேறி குருவிபிடித்துக் காட்டு” என்பார்கள் ஊரில்.

ஆக , வாழ்க்கையில் முன்னேற ஒவ்வொரு படியாகத்தான் கால் வைக்க வேண்டுமே தவிர எடுத்தவுடன் ஏரோபிளைனில் பறந்துவிட முடியாது.நாம் அம்பானியைத்தான் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. இந்த ஆட்டோக்காரர் கூட இளைஞர்களுக்கு ரோல் மாடல்தான்.ஒரு உந்து சக்திதான்.படித்து முடித்தவுடன் குறைந்த சம்பளமாக இருந்தாலும் அந்த வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறலாம் என்ற ப்ராக்டிகலான சூழ்நிலையை யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களே பிற்காலத்தில் தங்களை அம்பானிகள் என்று அழைத்துக்கொள்ளத் தகுதியானவர்கள்.மீண்டும் சந்திப்போம்.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

7 Responses to சாதிக்கப் பிறந்தவர்கள்

 1. Thannai mulumaiyaga purindhukolbavargale ambaaniyaga adippadai thaguthi kondavrgal.

  Liked by 1 person

 2. Kathir, It is a nice article. Of course, we need not have take examples of Ambani, Tata etc. There are people in and around us who can set example in so many aspects like hard work,, discipline, dedication, commitment etc. We have to salute them and we may consider them as our role models. It is always good to tell them about the good habits what they have and how it has influenced us. This communication helps them to get motivated and boost their ego.

  Keep writing. I am unable to type in Tamil. That is why post this in English Language.

  Liked by 1 person

  • Thanks a lot Siva for your valuable inputs.You are right.Its not that only Ambani can be considered as example.Even there are lot of others for us to be considered as role models.Thanks for your encouragement.No issues , you can also give your inputs in English.

   Like

 3. சாதிக்கப் பிறந்தவர்கள் – அவருக்கு கால் ஊனம்.அதுவும் கூட ஆட்டோவில் ஏறும் முன்பு எங்களுக்குத் தெரியவில்லை.அவரே சொன்ன பிறகுதான் தெரிந்தது.அவருடன் கன்னடத்தில் பேச்சுக்கொடுத்துக்கொண்டே சென்றேன் – அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு Kathirvel Subramaniam

  Liked by 1 person

  • மிக்க மகிழ்ச்சிங்க அய்யா.என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தங்களுக்கு நன்றிகள் பல.

   Like

 4. அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு Kathirvel
  Subramaniam

  2015-02-17 17:40 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “படித்து முடித்துவிட்டால் உடனே அம்பானி
  > ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் நிறையப் பேரிடம் வந்துவிடுகிறது.சிலருக்கு
  > படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிடுகிறது , சிலருக்கு கொஞ்ச காலம்
  > ஆகிவிடுகிறது.சம்பளம் குறைவான வேலைக்கெல்லாம் போவதற்கு பல இளைஞர்களுக்கு
  > மனமில்லை.அ”

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s