கேன்சர் – சில தகவல்கள்

cancerகேன்சர் நோய் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதாகவே தெரிகிறது.நமது சொந்தங்களில் பத்துக்கு ஒரு வீட்டில் ஒருவருக்கு ஏதாவது ஒரு விதமான கேன்சர் நோய் பாதிப்பு வந்துவிடுகிறது சமீப காலங்களில். விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை முகநூலில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் விவசாயத்தில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் , உரங்கள் பயன்படுத்துவது குறைந்த மாதிரி ஒன்றும் தெரியவில்லை.கேன்சர் நோய் வருவதற்கு வேறு சில காரணங்கள் இருந்தாலும் நமது உணவுப் பழக்க வழக்கங்களே முதன்மையான காரணமாக இருக்கிறது.

அவரவர் உணவுப் பழக்கத்தை அவரவரே கவனித்துக்கொள்ள வேண்டும் என்றாலும் இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை நிச்சயம் அதிகப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே நினைக்கின்றேன்.இன்றைக்கு ஆர்கானிக் காய்கறிகள் மக்களிடம் கொஞ்சம் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் , அதை வாங்கும் அளவிற்கு விலை அதிகமாக இருப்பதால் சிலர் மட்டுமே ஆர்கானிக் காய்கறிகளைத் தேடிப் போய் வாங்கும் நிலைதான் இன்றைக்கு நிலவுகிறது.குறைந்த பட்சம் நமது உணவுப் பழக்க வழக்கத்தையாவது நாம் சரிவர அமைத்துக்கொண்டால் ஓரளவு கேன்சர் நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

—> சமீபத்தில் ஆர்கானிக் காய்கறிகளைப் பற்றிப் படித்த செய்தியொன்றை இங்கே கொடுத்துள்ளேன்.உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.சென்னை நகர வாசிகள் ஆர்கானிக் காய்கறிகள் தேவைப்பட்டால் ஆன்லைனிலும் ஆர்டர் செய்துகொள்ளலாம்.முழுத் தகவலும் இங்கே ->

https://www.facebook.com/groups/503801763013562/permalink/656798711047199/?pnref=story

— > அதுபோக , கேன்சரை கட்டுப்படுத்தும் Soursop/Graviola  எனப்படும் முள்ளு சீதா/காட்டு ஆத்தாப்பழம் பரவலாகப் பேசப்படுகிறது.சில நாடுகளில் சாதாரணமாகக் கிடைக்கும் இந்தப் பழம் நமது நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படும் இந்தப் பழம் கேன்சரை குணப்படுத்தும் என்று இன்னும் அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை என்பதும் செய்தி.இந்தப் பழத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே –>

http://soursopb4u.in/

மற்றும்

http://payanikkumpaathai.blogspot.com/2011/12/blog-post.html

— >  சில மாதங்களுக்கு முன்பு கேன்சர் நோய் சிகிச்சை சம்பந்தமாக நான் சேகரித்த சில தகவல்கள் இங்கே உள்ளது –>

https://www.facebook.com/kathir.bangalore.3/posts/1543470535888708

இவை அனைத்தும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.அவற்றின் உண்மைத் தன்மையை விசாரித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதும் நம் கடமையே.

இதைப் படித்தவுடன் கண்கலங்கிவிட்டேன்.தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் , எந்தவொரு நோயையும் வெல்லலாம் என்பதற்கு இவரே சாட்சி.நேரம் இருந்தால் படியுங்கள்.கேன்சர் நோயில் இருந்து மீண்டவர் இவர் –> http://vaidehivc.blogspot.in/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3/

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s