அநாகரீக அரசியல் விமர்சனங்கள்

3கலைஞருக்கு வயதாகிவிட்டது என்பதும் , தலையில் முடி இல்லை என்பதும் உலகத்திற்கே தெரிந்த விஷயம்.உலகத்திற்கு தெரியாத விஷயம் என்னவென்றால் கலைஞர் எர்வாமேட்டின் கம்பேனியை தொடர்பு கொண்டு தலையில் முடி வளர எர்வாமேட்டின் ஆயிலை வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் இப்பொழுது தலை முழுக்க முடியுடன் ஒரு இளைஞரைப் போல் காட்சியளிப்பதாகவும்  சொல்லப்பட்ட செய்திதான்.உபயோகப்படுத்தும் முன்பு , உபயோகப்படுத்திய பின்பு என்று பிரித்து ஒரு இமேஜை ஒரு கூட்டம் தயார் செய்திருக்கிறது.இப்படி பல அரசியல் தலைவர்களைப் பற்றி நிறைய இமேஜுகள் கண்ணில் படுகிறது.சரி , இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம் என்றுகூட நீங்கள் சொல்லலாம்.என் கருத்தும் அதேதான்.நான் யார் இவர்களை கேள்வி  கேட்க சொல்லுங்கள்.கலைஞருக்கு முடி வளர்ந்துவிட்ட செய்தியை இந்த நாட்டு மக்களுக்குச் சொல்ல என்னை அந்தப் பதிவில்  டேக் செய்திருந்ததுதான் எரிச்சலாக இருக்கிறது.இது நடந்தது நேற்று முன்தினம். அதனால்தான் இந்தப் பதிவும் கூட.

பொதுவாக அரசியல் பதிவுகளை நான் தவிர்த்து வருவதற்கு காரணம் அரசியலைப் பற்றிப் பேசி விவாதம் நடத்தும் அளவிற்கெல்லாம் எனக்குத் தகுதியில்லை.அரசியலைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அதைச் செய்கிறார்கள் , அவர்களுடைய பதிவுகளில் என்னுடைய கருத்தைத் தெரிவித்துவிடுகின்றேன் , அவ்வளவுதான் முகநூலிற்கும் எனக்குமான அரசியல் தொடர்பு.

அரசியல்வாதிகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு.ஆனால் , அவர்களை விமர்சிக்கும் அளவிற்கான நாகரீகம் நமக்கு இருக்க வேண்டும்.ஒருவர் தவறு செய்தால் அதை நிச்சயம் நாம் சுட்டிக்காட்டலாம் , தவறில்லை.அதைச் சுட்டிக்காட்டும் பொறுப்பும் நமக்கிருக்கிறது என்றாலும் அநாகரீகமான முறையில் நமக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரை விமர்சிப்பது நாம் இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே காட்டுகிறது.கலைஞர் , ஜெயலலிதா , மோடி போன்ற அரசியல் தலைவர்கள்  ஒரே இரவில் அரியணை ஏறிவிடவில்லை.ஒவ்வொருவருக்கும் தனித் திறமை , தகுதி எல்லாம் உண்டு. அதனால் கிடைத்ததுதான் அந்த அரியணை . நம்மில் பலரும் தவறு செய்பவர்கள்தான் , அப்படித்தான் அரசியல்வாதிகளும்.இன்றைக்கு நமக்குப் பிடிக்கும் ஒரு அரசியல் தலைவர் நாளைக்கு பிடிக்காமல் போகலாம்.நாமும் அவர்களை விமர்சிக்கலாம்.எதுவும் அரசியலில் நிரந்தரமில்லை.

நீங்கள் எந்தவொரு அரசியல் தலைவரையும் எப்படிப்பட்ட அநாகரீகமான முறையிலும் விமர்சனம் செய்யுங்கள்.அது உங்கள் உரிமை.ஆனால் , உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நேரத்தையும் , உங்களுடைய அறிவையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறீர்கள் என்பதும் , நீங்கள் இன்னும் சிறுபிள்ளைத்தனமான காரியங்களைச் செய்பவராகவே இருக்கிறீர்கள் என்பதும் உங்களுக்கே தெரியாமல் போய்விடுவதுதான்  வேதனையான விஷயம்.

அரசியல்வாதிகள் பெரும்பாலும் அவர்களுக்குள் நாகரீகமான முறையில்தான் அரசியல் நடத்துகிறார்கள்.நமது தொண்டர் படைதான் இப்படிப்பட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகிறது.முதலில்  அரசியலைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு , அரசியலைப் பற்றித் தெரிந்தவர்களிடம் ஆரோக்யமான விவாதங்களில் ஈடுபடுங்கள்.அதுவே நாளைக்கு உங்களை ஒரு சிறந்த அரசியல்வாதியாகக்கூட மாற்றும்.

அதைவிட்டுவிட்டு இதுபோன்ற எரிச்சலூட்டும் பதிவுகளையும் , படங்களையும் போட்டு உங்கள் நேரத்தை வீணாக்குவது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய நேரத்தையும் வீணாக்காதீர்கள்.இங்கே நாம் கற்றுக் கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது.கற்றுக்கொள்ளுங்கள் , நாளைய இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்பதை மறக்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் விடை பெறுகின்றேன்.மீண்டும் சந்திப்போம்.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3/

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s