ஆடல் , பாடல் அட்டகாசங்கள்

2சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்து நடக்கும் ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளை என்ன நோக்கத்தோடு தொலைக்காட்சியில் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.மாதக் கணக்கில் நிகழ்ச்சியை நடத்தி , பல குழந்தைகளை அழவைத்து கடைசியில் ஒருவரைத் தேர்வு செய்கின்றனர். லட்சங்களில் பரிசும் அந்த ஒருவருக்கு கிடைத்துவிடுகிறது. விளம்பரத்தின் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாயில் சிறு தொகையைத்தான் பரிசாக கடைசியில் கொடுக்கிறார்கள்.அதுவும் கூட ஏதாவது ஒரு விளம்பரதாரர் கொடுத்துவிட்டால் அந்தப் பணமும் மிச்சம்.

இவர்கள் எப்படியாவது சம்பாதிக்கட்டும்.ஆனால் , பெற்றோர்களை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. பாட்டு நிகழ்ச்சியில் பாட வைக்க நேர்முகத் தேர்வுக்கு அழைத்துச் செல்லும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்குப் பாடத் தெரிகிறதோ , இல்லையோ ஒரு பெருமைக்காக டிவியில் வர வேண்டும் என்பதற்காகச் செல்கிறார்கள் என்றே தோனுகிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை என்றும் நான் விரும்பிப் பார்த்ததில்லை.அன்றைக்கு மனைவி பார்த்துக்கொண்டிருந்ததால் எதேச்சையாக என் கண்ணிலும் அந்த நிகழ்ச்சி பட்டது. நான் பார்த்த அந்தக் குழந்தைக்கு பாட்டு என்றால் என்னவென்றே கூட தெரிந்திருக்காது என்று நினைக்கின்றேன்.நடுவர்களுக்கு முன்னால் ஒரு பாடலைப் பாடாமல் வரிகளை அப்படியே ஒப்புவிப்பதைப் போல்தான் இருந்தது அந்தக் குழந்தையின் பாட்டுத் திறமை.நடுவர்கள் அந்தக் குழந்தையை ரிஜெக்ட் செய்துவிட வெளியில் வந்த குழந்தை ஒரே அழுகை.

இதில் முழுத் தவறும் பெற்றோருடையதே.தங்கள் குழந்தையும் இது போன்ற திறமைகளை வளர்த்துக்கொண்டு பிரபலம் ஆக வேண்டும் என்று ஆசைப்படலாம் , அதில் தவறில்லை.ஆனால் , அதற்குத் தேவையான தகுதி இருக்கிறதா என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.அவர் குழந்தை செல்கிறது நானும் என் குழந்தையை அழைத்துச் செல்கின்றேன் என்ற ரீதியில்தான் பெற்றோர்களின் மனநிலை உள்ளது.

சிறு வயதில் குழந்தைகளுக்கு தகுதியில்லாத செயல்களில் அவர்களை திணிக்காதீர்கள்.தங்களுக்கு தகுதி இல்லாததால்தான் தோல்வி ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ளும் வயது அவர்களுக்கில்லை.சிறு வயதில் இது போன்ற தேவையற்ற தோல்விகள் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும்.முதலில் உங்கள் குழந்தைகளுக்கு அந்தந்தத் துறையில் பயிற்சி கொடுத்து திறமையை வளருங்கள் , பிறகு பிரபலம் ஆக்கலாம்.உங்களுடைய ஆசைக்கு அவர்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள். பாவம் அவர்கள்.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3/

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s