குழந்தைகளுக்கு நல்ல ஆசானாக இருங்கள்

Bike and Car Fightநேற்று காலை அலுவலகம் வந்து கொண்டிருக்கையில் வேகத் தடை இருக்கும் ஓரிடத்தில் எனது பைக்கின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு சென்றிருக்கையில் எதிர் திசையில் ஒரு பைக்கும் அதற்குப் பின்னால் ஒரு மாருதி 800 காரும் வந்துகொண்டிருந்தது.பைக்கில் வந்தவர் ஸ்பீட் ப்ரேக் வந்ததும் பைக்கின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு மெதுவாகவே வந்தார்.அவருக்குப் பின்னால் வந்த மாருதி காரில் சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையனுக்கு அவனுடைய அப்பா ட்ரைவிங் கற்றுக்கொடுத்துக்கொண்டு வந்தார்.காரை ஓட்டியது அந்தப் பையன்.ட்ரைவிங்கில் அவ்வளவு அனுபவம் இல்லாததால் வேகத்தடை வந்ததும் அந்தப் பையனால் காரின் வேகத்தைக் குறைக்க முடியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த பைக்கில் மோதிவிட்டான் .அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்  தவறு முழுக்க முழுக்க அந்தப் பையனுடையது என்று .கார் பைக்கை மோதியவுடன் அந்தப் பையனின் அப்பா பைக்கில் சென்ற நபரிடம் சண்டையில் இறங்கிவிட்டார்.

தன் மகன் மேல் தவறில்லை என்றும் , பைக்கில் சென்றவர்தான் திடீரென  ப்ரேக் போட்டு நின்றுவிட்டார் என்றும் அவரிடம் விவாதத்தில் இறங்கிவிட்டார்.காரணம் , இது போன்ற சம்பவங்களில் யார் முதலில் இறங்கி தைரியமாக சண்டை போடுகிறார்களோ அவர்களே தவறு செய்யாதவர்கள் என்ற எழுதப்படாத விதி இங்கே உள்ளதுதான். அதனால் , தன் மகன் மேல் தவறு இருக்கிறது என்று தெரிந்தும் அப்பா பைக்காரரிடம் சண்டைக்குச் சென்றுவிட்டார். பாவம் அந்த பைக்காரர் , அதிகம் சத்தம் போடத் தெரியவில்லை. நமக்குத்தான் எங்கு அநியாயம் நடந்தாலும் ரத்தம்  கொதிக்குமே.கொதித்தது. நாட்டாமை உடையுடன் எனது பைக்கில் இருந்து கீழே இறங்கிச் சென்றேன் தீர்ப்புச் சொல்வதற்கு. “ஹலோ ஸார் , தவறு பைக்காரருடையதல்ல , உங்கள் மகன் வேகத்தடையில் நிறுத்தாமல் வேகமாக வந்ததால் காரை பைக்கில் இடித்துவிட்டார் , அவரை எதற்கு திட்டுகிறீர்கள்” என்று கொஞ்சம் சத்தம் போட்டேன்(சத்தியமாக மனதில் ஒரு வித பயத்துடன் முகத்தை மட்டும் கோபமாக வைத்துக்கொண்டு , நம்ம ஹீரோயிசம் என்னவென்றுதான் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியுமே).

நான் விட்ட கொஞ்ச நஞ்ச சத்தத்தில் பக்கத்தில் இருந்தவர்களும் அவர்களுடைய உதவிக் கரத்தை நீட்டியதால் அனைவரும் சேர்ந்து தவறு அந்த காரை ஓட்டி வந்த பையனுடையதுதான் என்று தீர்ப்பை எழுதிவிட்டோம்.இல்லை என்றால் நிச்சயம் அந்த பைக்கில் வந்த அப்புராணி கார்க்காரருக்கு நஷ்ட ஈடு கொடுத்திருப்பார்.ஸோ , பிரச்சனை முடிந்தது.நானும் என்னுடைய நாட்டமைத் துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.

தன் மகன் தவறு செய்திருக்கிறான் என்று தெரிந்தும் அவன் முன்னாலேயே அந்தத் தவறை நியாயப்படுத்தி சண்டைக்குச் சென்ற அப்பாவால் தன் மகனுக்கு எப்படி ஒழுக்கம்/குணம் என்றால் என்ன என்று சொல்லித்தர  முடியும்.அவன் வளர்ந்த  பிறகு இதே போன்ற சூழ்நிலையில் தன் மீது தவறே இருந்தாலும் இப்படித்தானே சண்டைக்குச் செல்வான் என்ற குறைந்த பட்ச யோசனைகூடவா அந்த தகப்பனுக்கு வரவில்லை.பெற்றோர்களிடம் இருந்துதானே குழந்தைகள் நற்குணங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.இங்கே , அப்பாவே மகனின் தவறை ஆதரிக்கும் விதமாக நடந்துகொண்டால் அவன் எப்படி வளர்க்கப்படுவான் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

பெற்றோர்களே , உங்கள் குழந்தைகள் மேல் அன்பு/பாசம் எல்லாம் வையுங்கள்.ஆனால் , குழந்தை தவறு செய்யும்போது அந்தத் தவறை அவர்கள் உணரும்விதமாக எடுத்துச் சொல்லுங்கள்.அதுதான் நல்ல பெற்றோர்களுக்கு அழகு. நீங்கள் இன்றைக்கு உங்கள் சண்டையால் வென்றுவிட்டாலும் கூட , மகன் வளர்ந்த பிறகு இது போன்ற ஒரு சம்பவத்தில் பெரிய இழப்பைக்கூடச் சந்திக்க நேரிடும்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கிக்கொள்ள நீங்களே உறுதுணையாக இருந்துவிடாதீர்கள்.

தன் குழந்தையாக இருந்தாலும் தவறு செய்தால் அது தவறுதான்.அதை நியாயப்படுத்திப் பேசும் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தர தவறியவர்களே. மீண்டும் சந்திப்போம் .

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3/

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to குழந்தைகளுக்கு நல்ல ஆசானாக இருங்கள்

  1. அருமை. வாழ்த்துகள்.

    Liked by 1 person

  2. நன்றிகள் அய்யா.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s