பாவப்பட்ட மனிதர்கள்

mananalam kulandhaigalமன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு விதமான உறுத்தல் வந்துவிடுகிறது.என்னதான் நாம் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்தாலும் , வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாலும் , உடலும் மனமும் சரியில்லை என்றால் பணமும் , வசதியும் ஓரம் கட்டப்பட்டு விடுகின்றன.கோடிக்கணக்கில் சொத்து பத்துகள் இருப்பவனுக்கு ஒரு மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்துவிட்டால் எத்துனை கோடிகள் செலவழித்தாலும் அந்தக் குழந்தையை சக மனிதர்களின் நிலைக்குக் கொண்டுவர முடிவதில்லை.அங்கே பணம் ஜெயிப்பதில்லை.

முன்பெல்லாம் கேன்சர் நோய் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் வரும் நோய் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இன்றைக்கு அப்படியில்லை.கிட்டத்தட்ட நம் சொந்தபந்தங்களில் யாரேனும் ஒருவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பார்.இன்றைய வாழ்க்கை முறையோடு சேர்த்து , உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணம் என்றால் , இன்றைக்கு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.அதுவே கேன்சர் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.இன்றைக்கு ஆங்காங்கே இயற்கை விவசாயம் நடப்பது சற்று ஆறுதலான விஷயம்.

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பொருந்த வரை ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணம்.இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் நிலை பரிதாபத்துக்குறியது என்றாலும் அவர்களைப் பொருத்தவரை அந்தக் குழந்தைகள் அவர்களுக்கு செல்வம்தானே.

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பராமரிப்பது இறைவனுக்குச் செய்யும் தொண்டுக்கு சமமானது என்பார்கள்.அதற்கு சாட்சியாக இருந்தார் அன்றொரு நாள் நான் கண்ட அந்த அன்புத் தாய்.இரண்டு ஆண் பிள்ளைகள் அவருக்கு.இருவருக்கும் சுமார் இருபது வயதிருக்கும்.இருவரும் மன நலம் குன்றியவர்கள்.இருவரையும் அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு வந்திருந்தார்.வந்தவர் , ஒரு பையனை உட்காரச் சொல்லி விட்டு மற்றொரு பையனை அழைத்துக்கொண்டு குழந்தைகள் விளையாடும் இடத்திற்குச் சென்றார்.

உட்காரச் சொல்லிவிட்டுச் சென்ற அந்தப் பையன் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.இருவரும் நன்றாகவே உடை உடுத்தியிருந்தனர்.என் அருகில் உட்கார்ந்தவரைப் பார்த்து நான் புன்னகையை வெளிப்படுத்தினாலும் அதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவருக்கு சக்தியில்லை.என்னை அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டு மீண்டும் வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறார்.சந்தோஷம் , மகிழ்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர் இல்லை.நடைப் பயிற்சி முடிந்தால் உடனே வீட்டிற்கு வந்துவிடும் நான் அன்று மட்டும் அவர் அருகிலேயே சுமார் பத்து நிமிடம் அமர்ந்திருந்தேன்.

பணத்தை முன்னிலைப் படுத்தி வாழும் வாழ்வில் இப்படிப்பட்ட குழந்தைகளை/மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் பணத்தைவிட ஆரோக்யமான உடலைப் பெற்றிருப்பதே உயர்வாகப் படுகிறது.பணத்தின் முக்கியத்துவம் அதற்குப் பிறகுதான்.அட என்னடா வாழ்க்கை இது என்பதைப் போல் ஆகிவிடுகிறது.

இது போன்ற மனிதர்களைச் சந்திக்கும் பொழுதுதான் நம்மை நாம் மற்றவர்களுடன் பணத்தை முன்னிறுத்தி ஒப்பிடுவதில்லை.தாயுடன் சென்ற மற்றொரு பையன் விளையாட்டுப் பகுதிக்குச் சென்று குழந்தைகளுடன் விளையாடத் தொடங்கி விட்டார்.அவராக அங்கே விளையாடச் செல்லவில்லை.அவர் அம்மாதான் அங்கே அழைத்துச் சென்றார்.அவரைப் பொருத்தவரை என்னதான் இருபது வயது ஆகியிருந்தாலும் , இரண்டு பையன்களும் அவருக்கு குழந்தைதான்.மகனுடன் சேர்ந்து அவரும் விளையாடினார்.மற்ற மகனால் விளையாடும் அளவிற்கு உடல் நிலை இல்லை என்பதால் உட்காரச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

நான் அங்கிருந்து கிளம்பும் பொழுது அந்தப் பையனிடம் “சென்று வருகின்றேன்” என்று சொன்னதைக் கூட அவனால் புரிந்து கொள்ளமுடியாமல் எந்தவொரு உணர்வையும் வெளிப்படுத்தமுடியவில்லை. இவர்கள் இப்படியென்றால் எங்கள் பக்கத்துக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு இசுலாமிய தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.மூன்றில் முதல் இரண்டு ஆண் குழந்தைக்கும் மன வளர்ச்சி இல்லை.இருவரும் பெற்றோர்களுடனேயே இருக்கிறார்கள்.அவர்கள் வசிக்கும் அந்த அடுக்கு மாடிக்குடியிருப்போடு சேர்த்து மூன்று நான்கு அடுக்கு மாடிக்குடியிருப்பும் அவர்களுக்கு சொந்தமாக இருப்பதோடு , கோடிக் கணக்கில் சொத்தும் , கணவருக்கு அரசாங்க உத்தியோகமும் இருக்கிறது.எல்லாம் இருக்கிறது , முழுமையான மகிழ்ச்சியைத் தவிர.வேதனை.

இவர்கள் வேதனை இப்படியென்றால் , இது போன்ற மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளையோ , பெரியவர்களையோ கிண்டல் , கேலி செய்வதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது.இவர்கள் செய்யும் கிண்டலில் எவ்வளவு கீழ்த்தரமான செயல் இருக்கிறது என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத ஜென்மங்கள்.வயிற்று வலியும் , தலை வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதைப் போல் தங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் மன நலம் குன்றிப் பிறந்திருந்தால் அந்த வலி தெரியும்.

மன வளர்ச்சி குன்றியவர்களை நம்மால் குணமாக்க முடியாது என்றாலும் குறைந்த பட்சம் அவர்களிடத்தில் அன்பையாவது காட்ட முடியுமே நம்மால்.அதையாவது நாம் செய்வோமே என்ற ஆதங்கம்தான்.நமக்கெல்லாம் துக்கம் என்றால் ஒரு உணர்வும் , மகிழ்ச்சி என்றால் ஒரு உணர்வும் இருப்பதைப்போல இந்தக் குழந்தைகளுக்கு எதுவும் இல்லை.எதுவாக இருந்தாலும் ஒரே மன நிலைதான் , ஒரே உணர்வுதான்.இப்படிப்பட்ட குழந்தைகளை/பெரியவர்களை கருணை அன்போடு பார்ப்பவர்களும் , அவர்களைத் தனியாக இல்லங்களில் பாதுகாத்து வரும் சில நல்லுள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.நாம் கீழோர்களை ஒதுக்கிவிட்டு மேலோர்களை வணங்கிவிட்டுச் செல்லவேண்டியதுதான்.

நோய் நொடியின்றி , உடலும் மனதும் நல்ல ஆரோக்யத்துடன் இருப்பதே மிகப்பெரிய சொத்து நமக்கு.இந்த பாவப்பட்ட மனிதர்களை எல்லாம் பார்க்கும் பொழுது மன வளர்ச்சியை விட பண வளர்ச்சி பெரியதாகத் தெரியவில்லை.மீண்டும் சந்திப்போம்.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3/

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

One Response to பாவப்பட்ட மனிதர்கள்

  1. kadavul padaippil sila piralzhchigal.. yaarai novadhu?

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s