அறிவுத் திருட்டு

Arivu Thiruttu“அறிவுத் திருட்டு” என்பது இப்போதெல்லாம் மிகச் சாதாரண விஷயமாகிவிட்டது.பள்ளிக்கூடத்தில் கவிதைப் போட்டிக்கு மற்றவர் எழுதிக்கொடுத்த கவிதையை எடுத்துச் சென்று தன்னுடையது என்று சொல்வதில் இருந்து மற்றவரின் கதையை தன் கதையென்று சொல்லி திரைப்படம் எடுப்பது வரை எல்லாமே அறிவுத் திருட்டில் வரக்கூடியவைதான்.இங்கே பள்ளிக்கூடத்தில் கவிதைப் போட்டிக்கு கொண்டு செல்லும் கவிதை என்று ஏன் குறிப்பிட்டேன் என்றால் நானும் அதை பள்ளிக்காலங்களில் செய்தவன்தான்.அன்றும் , இன்றும் எங்கள் ஊரில் தமிழ்ப் புலமை பெற்ற அண்ணன் சூர்யபாலன் அவர்களிடம் இருந்து கவிதை எழுதி வாங்கிச் சென்று பந்தாவாக பள்ளியில் சமர்ப்பித்த காலங்கள் உண்டு.ஆனால் அவரிடத்தில் கவிதை எழுதித் தரச் சொல்லும்போது எதற்காக என்று சொல்லிவிடுவேன்.அப்படி அவர் எழுதித் தந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுவிட்டால் பரிசை வாங்குவது மட்டுமே நான் என்றாலும் அதற்கு உண்மையான சொந்தக்காரர் அண்ணன்தான்.

நமக்கும் கவிதைக்கும் பல ஆயிரம் மைல் தூரம் என்பதால் இப்படிச் செய்யும்படி ஆகிவிட்டது.நான் செய்த இந்த அறிவுத் திருட்டெல்லாம் இன்றைக்கு நடக்கும் அறிவுத் திருட்டுகளுக்கு அருகில் நெருங்கவே முடியாது என்பதுதான் உண்மை..என்னுடைய அன்றைய அறிவுத் திருட்டு ஒரு பிக்பாக்கெட் திருடனைப் போன்றது என்றால் இன்றைக்கு நடக்கும் அறிவுத் திருட்டுகள் கொலைகாரனைப் போன்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் ஒரு படம் எடுத்து திரைக்கு வரும் வரை பெரும்பாலும் அறிவுத் திருட்டுகள் வெளியில் தெரிவதில்லை. வந்த பிறகு வழக்குகள் , நீதிமன்றம் என்று செல்கிறது அறிவுத் திருட்டு சம்பந்தமான பிரச்சனைகள்.மிகச் சிறந்த இயக்குநர்கள் என்று சொல்லப்பட்டவர்களே கூட இப்படிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்கள்.இந்தத் துறையைப் பொறுத்த வரை அறிவுத் திருட்டு என்பது ஒரு படத்தின் தலைப்பைத் திருடுவதாகவும் இருக்கலாம் அல்லது ஒருவர் தம்மிடம் சொல்லிய கதையை தன் கதையாக பெயர் மாற்றி எடுத்த படமாகவும் இருக்கலாம்.இப்படி பல வகைகள் உண்டு.

பத்திரிக்கைகளிலும் கூட ஒருவர் எழுதிய கவிதையையோ , கதையையோ மற்றொருவர் தன்னுடையது என்று அனுப்பிவைத்து பிரசுரித்து விடுவதில்லையா.அப்படி நடந்த சில சம்பவங்களும் கேள்விப்பட்டதுண்டு.இவ்வளவு ஏன் , முகநூலில் கூட தினமும் நடக்கும் விசயம்தானே இந்த அறிவுத் திருட்டு சமாச்சாரங்கள்.அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட்டு அதை தன்னுடைய பதிவென்று பெருமைபட்டுக் கொள்வதுண்டு.இதில் சிலர் மற்றவர்களுடைய பதிவு என்றாலும் அதை தங்களுடைய டைம்லைனில் போடும்போது அந்தப் பதிவிற்கு சொந்தக்காரர் யாரோ அவர்களை குறிப்பிட்டுவிடுகிறார்கள்.அவர்களை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

சமீபத்தில் எழுத்தாளர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.முன்னணி வாரப்பத்திரிக்கைகளுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.அறிவுத் திருட்டைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை அவர் அதிர்ச்சியாகாமல் சொன்னார்.அவர் என்னிடம் சொன்ன அந்த நபர் பிரபலம் என்று மக்களால் அறியப்பட்டவர்.தமிழுக்கான சங்கங்களில் பொறுப்புகள் வகித்தவர்.அப்படிப்பட்ட பொறுப்புகளில் முக்கியப் பொறுப்பை வகிக்கும் பதிவியொன்று காலியாக இருந்துள்ளது.நமது பிரபலம் அந்தப் பதவியை குறி வைத்திருக்கிறார்.மற்ற சிலரும் அந்தப் போட்டியில்.

இப்பொழுது நம் பிரபலம் தன்னை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து தனித்துவம் வாய்ந்தவராக காட்டிக்கொண்டால் மட்டுமே அந்தப் பதவிக்கான தேர்தலில் ஜெயிக்க முடியும் என்ற நிலை.உடனே அன்றைக்கு சிறப்பாக எழுதி வந்த ஒரு எழுத்தாளரைப் பிடிக்கிறார் நம் பிரபலம்.சிறப்பாக மட்டுமே எழுதி வந்தாரே தவிர அந்த எழுத்தாளர் பிரபலம் எல்லாம் இல்லை.நம் பிரபலம் அவரிடம் சென்று தனக்காக ஒரு புத்தகம் எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார்.அந்த சிறப்பான எழுத்தாளர் எழுதித் தரும் புத்தகத்தில் எழுதியது அவர் என்றிருக்காது.எழுதியவர் நம் பிரபலம் என்று இருக்க வேண்டும் என்று பேசி டீலிங்கும் முடிந்து புத்தகமும் வெளிவந்தது.நம் பிரபலமும் இந்த சமூகத்திற்குத் தேவையான மிகச் சிறந்த படைப்பை மக்களுக்குக் கொடுத்துள்ளார் என்று நம் பிரபலத்தையே தேர்தலில் தேர்வு செய்தும் விட்டனர்.இப்பொழுது நம் பிரபலம்தான் தமிழை அங்கே வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தனிக்கதை.

மேலே குறிப்பிட்ட அறிவுத் திருட்டைத்தான் நான் கொலை செய்வதற்கு சமம் என்றேன்.பொதுவாக இந்த அறிவுத் திருட்டுகள் மற்றவரின் சம்மதத்துடனோ , அவருக்குத் தெரியாமலோ எப்படி நடந்தாலும் அதற்கு ஒரேயொரு காரணம் நாமும் திருடியாவது வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம் என்ற கீழ்த்தரமான புத்தியால்தான் நடக்கிறது.சிறு வயதில் நான் செய்தது தவறு என்று எனக்குத் தெரியும்.ஆனால் அதை அப்போது என்னால் உணரும் அளவிற்கான வயது முதிர்ச்சி என்னிடம் இல்லாததுதான் காரணம்.

எல்லோருக்கும் பிரபலம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கலாம் , தவறில்லை.ஆனால் அதற்கான வழி நேர்வழியாக இருக்கவேண்டுமே தவிர இப்படித் திருட்டுத்தனமான குறுக்கு வழிகளாக இருக்கக்கூடாது.மனசாட்சியை முழுவதும் அடமானம் வைத்த ஒருவரால்தான் துணிந்து இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களைச் செய்ய முடியும்.

பல நாள் திருடன் எப்படி ஒரு நாள் மாட்டிக்கொள்வானோ அதே போன்றுதான் அறிவைத் திருடுபவர்களும் ஒரு நாள் மாட்டிக்கொள்வார்கள் என்பதை மறுக்கமுடியாது.இந்த உலகில் நாம் வாழ்வது கொஞ்ச நாள் , அந்த நாட்களை நேர்மையான முறையில் வாழ்ந்தாலே நமக்கு நாம் பிரபலம்தான்.இப்படிக் கீழ்த்தரமான செயல்கள் செய்து பிரபலம் ஆவதால் நாம் வாழ்ந்த வாழ்க்கை நிச்சயம் முழுமை அடையாது.அதை முதலில் இந்தத் திருடர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.மீண்டும் சந்திப்போம்.

———–கதிர்.

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to அறிவுத் திருட்டு

  1. jayapaal ramaswamy says:

    பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொள்வான் என்பதெல்லாம் ஆறுதல் படுத்த த் தானே தவிர உண்மையில்லை. மாட்டிக்கொள்ளாத திருடர்கள் எத்தனையோ பேர் உண்டு

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s