கில்லாடிகள்

1பெங்களூரில் அதிகமாக இருப்பது எதுவென்றால் அது மருந்துக் கடைகள்தான்.நான் குறிப்பிட்ட மருந்துக் கடை “மெடிக்கல் ஷாப்”. நீங்களாகவே வேறு மருந்துக் கடையை மனதில் நினைத்துக்கொண்டால் அதற்கு கம்பேனி நிர்வாகம் பொறுப்பல்ல.

எங்கள் ஏரியாவில் மட்டும் குறைந்தது 25 மெடிக்கல் ஷாப்புகளைப் பார்க்கலாம்.அத்துனை கடைகளிலும் சுமாரான கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும்.நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.அந்த மெடிக்கல் ஷாப்பை நடத்துபவர் ஒரு தெலுங்குக்காரர்.எங்கள் வீட்டில் இருந்து ஐந்து நிமிடத்தில் நடந்து சென்றுவிடலாம்.எனக்கு அவரை பல வருடங்களாகத் தெரியும்.மனிதர் பண்பானவர் , அதோடு அன்பானவரும் கூட.

இரண்டு நாட்களுக்கு முன்பு மகனுக்கு ஷாம்பு வாங்கச் சென்றிருந்தேன் அங்கே.அப்பொழுது பைக்கில் இருந்து ஒரு இளைஞர் டிப் டாப்பாக உடை அணிந்து கண்ணில் கூலிங்கு கிளாசு போட்டுக்கொண்டு காதில் ஒயரை மாட்டிக்கொண்டு யாரிடமோ பேசியவாறே இறங்கி வந்தார்.பார்த்தவுடன் தெரிந்துவிடும் அவர் ஒரு டுபாக்கூர் என்று.வந்தவர் ஒரு சிரிஞ்சும் , ஒரு பாட்டில் மருந்தும் வாங்கிவிட்டு தன் பேன்ட் பாக்கெட்டைத் தடவினார். “அய்யய்யோ சார் , நான் பர்ஸை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டு வந்துவிட்டேன் , நீங்க மருந்த கொடுங்க , நான் மதியம் வந்து பணத்தை தருகிறேன்” என்றார்.தெலுங்குக்காரரும் நம்பிக் கொடுத்துவிட்டார்.

நமக்குத்தான் தேவையற்ற வேலைதானே பிடித்த ஒன்று.அதனால் “என்னங்க இவரை உங்களுக்கு தெரியுமா , பாத்தாலே பிராடுன்னு தெளிவா தெரியுது , எப்படி நம்பி கொடுத்தீங்க” என்று கேட்டுவிட்டேன்.”என்ன சார் பண்றது , இவன இப்பத்தான் மொதல் தடவ பாக்குறேன் , ஆளு லோக்கலா இருப்பான் , இல்லீன்னும் சொல்ல முடியாது , வருவான்னு நம்பி கொடுத்திருக்கேன் , வரலீன்னா காசு போனதுதான் , பாப்போம் ” என்று வருத்தமாகவே பதிலளித்தார்.

நான் அந்த மெடிக்கல் ஷாப்பின் பெயர் பலகையைப் பார்த்தேன்.அது “ஸ்ரீ ஆதிநாராயணா மெடிக்கல் ஷாப்” என்று காட்டியது.இப்படியும் இந்தக் காலத்தில் ஒரு வியாபாரியா என்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொண்டு அவருக்காக அவர் வணங்கும் அதே நாராயணனை வேண்டிக்கொண்டு இடத்தைக் காலிசெய்தேன்.ஏனோ தெரியவில்லை , “ஏமாறாதே ஏமாற்றாதே” பாடல் ஒரு முறை நினைவில் வந்து போனது.

————— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3/

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s