நாடு போற்றும் நாயுடுகார்

1செம்மரம் வெட்டிய 20 தமிழர்களை சுட்டுக்கொன்று நீதியை நமக்கு படம்பிடித்துக்காட்டியிருக்கிறது ஆந்திரம்.பொதுவாக செம்மரம் வெட்ட ஆந்திரா செல்பவர்கள் வறுமையின் பிடியில் இருப்பவர்கள்.அவர்களை மூளைச் சலவை செய்து அழைத்துச் செல்கிறார்கள் என்றும் , இல்லை ரிஸ்க் என்று தெரிந்தும் அதிக பணம் கிடைக்கும் என்பதால் இவர்களே தெரிந்துதான் செல்கிறார்கள் என்றும் பலதரப்பட்ட செய்திகளைக் காணமுடிகிறது.

மூளைச் சலவையோ , தெரிந்தே சென்றிருந்தாலோ எதுவாக இருந்தாலும் குறைந்த நாட்களில் நிறைய சம்பாதித்து விடலாம் என்ற ஆசைதான் இவர்களின் உயிரைப் பறித்திருக்கிறது.அதை நிச்சயம் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.பேராசை பெருநஷ்டம் என்பதற்கு நிகழ்கால சம்பவங்களில் இதுவும் ஒன்று.

நான் இவர்கள் வறுமையின் பிடியில் இருப்பவர்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக இயற்கை வளங்களை அழிப்பதை சரியென்று சொல்வதற்கில்லை.அவர்கள் செய்ததும் குற்றம்தான்.இவர்கள் வறுமைக்காக அங்கே மரம் வெட்டச் சென்றார்கள் என்று நாம் வாதாடினால் இங்கே நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் நியாயம் கண்டுபிடித்துவிடலாம்.இவர்களின் வறுமை நிலையை போக்க நமது அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை என்பது மற்றுமொரு குற்றச்சாட்டு.அதனால் இந்த விசயத்தில் நம்மவர்களை நியாயப்படுத்திப் பேச முடியவில்லை.வறுமை என்பதால் அதே திருவண்ணாமலை பகுதியில் இருந்து(ஏன் எங்கள் ஊரிலேயே ) எங்கள் பகுதிகளில் வந்து கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் நிறையப் பேர் இன்னும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

சரி அதற்காக திட்டம் தீட்டி பேருந்தில் சென்றுகொண்டிருந்தவனை எல்லாம் பிடித்து வந்து சுட்டுக் கொன்று நமக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும் என்றால் அது காட்டு மிராண்டித்தனம் என்பதற்கும் மேலான விஷயம்தான்.தமிழர்கள் செய்தது குற்றம்தான் என்றாலும் ஆந்திர காவல்துறை செய்த குற்றம் அதை விட நூறு மடங்கு அதிகம்.ஆந்திர காவல்துறை கொடுத்த தண்டனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

செம்மரம் வெட்ட தமிழகத்தில் இருந்துதான் அதிகம் ஆட்கள் செல்கிறார்கள் , இவர்களுடன் தொடர்ந்து இம்சையாக இருக்கிறது , ஒரு முறை இப்படி சுட்டுத் தள்ளினால் இனிமேல் எவனாக இருந்தாலும் இங்கே வரப் பயப்படுவான் என்ற கீழ்த்தரமான திட்டமும் , செம்மரம் கடத்தும் ஆந்திரத்தைச் சேர்ந்த பெரு முதலைகளை கைது செய்ய முடியாத காவல்துறையின் கையாலாகாத் தனமும் இப்படியொரு எளிதான முறையை கையில் எடுத்து அதில் பெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறது.

நேற்றைக்குப் படித்த செய்தி இன்னும் கோபத்தை அதிகப் படுத்துகிறது.மனித உரிமை மீறலில் இன்னும் ஒருபடி மேலே சென்று இவர்களை சுட்டுக்கொல்வதற்கு முன்பு கொடூரமாக கொடுமைப்படுத்தி பிறகு கொன்றிருக்கிறார்கள்.உடம்பில் ஆசிட் ஊற்றி , கண்களைப் பிடுங்கி , உடல் பாகங்கள் சிலவற்றை எடுத்து என்று பல கொடுமைகளை அனுபவித்த பிறகே அந்த உயிர்கள் பிரிந்திருக்கிறது என்பது அதிர்ச்சித் தகவல்.

எளிமையான முறையில் கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டை எப்படி நிலைநிறுத்துவது என்பதை நாயுடுகாரும் , அவருடைய காவல் தெய்வங்களும் உலகிற்குச் சொல்லியிருக்கிறார்கள்.

இது போன்ற மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அதே நேரத்தில் நம் மக்களும் குறைந்த வருமானமாக இருந்தாலும் உழைத்தால் சம்பாதிக்க நிறைய இடங்கள் இருக்கின்றன என்பதை முதலில் உணர வேண்டும்.ஊரில் வேலை இல்லை , அதனால்தான் அங்கே செல்கின்றோம் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் பதிலில்லை.

ஆந்திர காவல்துறையின் இந்த மட்டமான திட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பது சின்னப் பிள்ளைகளுக்கு கூட தெரியும்.என்கவுன்ட்டர்களை லாஜிக்கோடு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இவர்கள் சமீபத்திய சில தமிழ் திரைப்படங்களைப் பார்க்கலாம்.

திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்த நாயுடுகார் , ராஜபக்சேவை நினைவுபடுத்துகிறார்.ஆம் , ராஜபக்சேவிற்கும் நாயுடுகாருக்கும் இந்த விசயத்தில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

—————– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s