பெண்கள் நம் கண்கள்

1குழந்தையை ஒரு நாள் முழுக்க பார்த்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் என்று மனைவியார் சபதம் போடுகிறார்.குழந்தையை குளித்து விடுவதில் இருந்து , குழந்தை உச்சா போனாலும் , சுச்சா போனாலும் அனைத்தும் நம் பொறுப்புதான்.நீங்கள் மட்டும் இதைச் செய்து காட்டுங்கள் உங்களுக்கு பொறுமைக்கான நோபல் பரிசுக்கு நான் சிபாரிசு செய்கின்றேன் என்று பில்ட் அப் வேறு கொடுக்கிறார்.நம் டிசீன் என்னவென்று நமக்கு நன்றாகவே தெரியும் என்பதால் இது போன்ற சின்னச் சின்ன சவால்களுக்கெல்லாம் எப்பொழுதும் செவி சாய்ப்பதில்லை .

இப்பொழுது மாமனார் வந்து வசமாக மாட்டிக்கொண்டார்.நாங்கள் இருவரும் அலுவலகம் சென்ற பிறகு அவர்தான் பெரியவனையும் , சின்னவனையும்  இரவு நாங்கள் திரும்பி வரும் வரையில் பார்த்துக்கொள்கிறார்.ஒரு மாதம் ஆன்சைட் அசைன்மெண்ட்டில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பெங்களூர் வந்திருக்கிறார்.குழந்தைகள் இருவரையும் கவனித்துக்கொள்வதில் அவருக்கு இருக்கும் பொறுமையில் பத்து சதவீகிதமாவது எனக்கும் கிடைக்க வேண்டும் என்று நானும் குல தெய்வத்தை வேண்டாத நாளில்லை.இருந்தாலும் அந்தப் பொறுமை கிடைப்பதாகத் தெரியவில்லை.

சுமார் பத்து மணி நேரம் அவரே இருவரையும் பார்த்துக்கொள்கிறார்.கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இரண்டு பேரன்களையும் சாப்பாடு ஊட்டுவதில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து கவனித்துக்கொள்கிறார்.சரி , இதெல்லாம் ஒரு பெரிய விசயமா என்றால் ஆம் பெரிய விசயம்தான் என்று அடித்துச் சொல்வேன்.ஒரு பெண் குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்கும் , அதே வேலையை ஆண் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நானெல்லாம் ஒரு குழந்தையை தனியாக பார்த்துக்கொள்வதே சிரமம் , இரண்டு என்றால் மயக்க நிலைதான்.இப்பொழுது மாமனாரைப் பார்த்து கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

சரி , மனைவிக்கும் காலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரை வீடு , வீடு விட்டால் அலுவலகம் என்று தொடர்ந்து வேலை.மாமனாரும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார் , பிறகு எப்படி என்னை மட்டும் பேஸ்புக் பார்க்க விடுவார்கள்.நம்மால் வேலை செய்ய முடியவில்லை என்றாலும் செய்வதைப் போன்றாவது நடிக்க வேண்டும்தானே.நம் கணவர் இன்றைக்கு பரவாய் இல்லை ,வீட்டில் கொஞ்சம் வேலை செய்தார் என்ற உணர்வை மனைவிக்கு கொடுத்துவிட வேண்டும்.பிறகு ஒரு நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பேஸ்புக்கலாம் வீட்டில்.

காலையில் வாஷிங் மெசினில் துணியைப் போட்டு துவைத்த பின் எடுத்துச் சென்று மொட்டை மாடியில் போட்டுவிட்டு வர வேண்டும்.இந்த வேலையை நானே தேடிச் சென்று பெற்றுக்கொண்டேன் மனைவியாரிடம் இருந்து.காரணம் , வாஷிங் மெசினில் துணி துவைத்துக்கொண்டிருக்கும் பொழுது நாம் இங்கே ஹாயாக அமர்ந்து பேஸ்புக்கில் விளையாடலாம்.ஆனால் , அவ்வப்பொழுது அங்கும் இங்கும் ஓடியபடியே ஏதாவது செய்துகொண்டிருந்தால் நாம் ஏதோ வேலை செய்கிறோம் என்ற உணர்வு மனைவிக்கு வந்துவிடுகிறது.

குழந்தைகளுக்கு அப்பன் மேல் அவ்வளவு பிரியம்.அதிலும் பெரியவன் அப்பாதான் குளித்துவிட வேண்டும் என்று அடம் பிடிக்கும் ரகம்.அவனை குளித்துவிடுவதெல்லாம் ஒரு ஐந்து நிமிடத்தில் முடித்துவிடலாம்.நாம் அவ்வளவு எளிதில் வேலையை முடிப்போமா என்ன.குறைந்தது நாற்பது நிமிடங்கள் எடுத்துக்கொண்டு பாத்ரூமில் ஊர் கதை அனைத்தும் பேசிவிட்டு குளித்துவிட்டு அழைத்து வந்து அவனுக்கு மேக் அப் செய்துவிட்டால் ஒரு மணி நேரத்தை ஓட்டி விடலாம் என்பதால் அந்த வேலையையும் நானே எடுத்துக்கொண்டேன்.

இதுபோக முக்கியமான கடினமான வேலை என்னவென்றால் பாத்திரம் துலக்கி வைப்பதுதான்.அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் நேரமாக வந்துவிட்டால் இந்த அசைன்மெண்ட் நமக்குத்தான்.என்னதான் ஆண்கள் மாங்கு மாங்கு என்று பாத்திரம் துலக்கி வைத்தாலும் அதில் எப்படியும் குற்றம் கண்டுபிடித்து விடுவார்கள் பெண்கள்.இந்த வேலையில் நாம் அவர்களை ஏமாற்ற முடியாது.இதுதான் சற்று கடினமான வேலை.இதில் பாஸ் ஆகிவிட்டால் மனைவி நம்மைப் பார்த்து முறைப்பது குறைந்தது மூன்று நாட்களுக்கு இருக்காது என்பது என் வாழ்நாள் அனுபவம்.

மேலே குறிப்பிட்ட வேலைகளைச் செய்தால் ஒரு நாளுக்கு சுமார் அரை மணி நேரம் பேஸ்புக் பார்க்க அனுமதி கிடைத்துவிடுகிறது.

இதோடு சேர்த்து ஆன்சைட் அசைன்மெண்ட்டில் பெங்களூர் வந்திருக்கும் மாமனாரையும் சந்தோசப்படுத்த வேண்டும்.சந்தோஷம் என்றால் தன் மகளை ஒரு நல்லவருக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்ற மன நிம்மதி.அதற்காக சில பல பில்ட் அப்புகளையும் செய்தாக வேண்டும்.

அதோடு , அவ்வப்பொழுது அவர் இருக்கும்போது அலுவலகத்தில் இருந்து போன் வந்தால் அவருக்கு கேட்கும் அளவிற்கு ஆங்கிலத்தில் சத்தம் போட்டுப் பேசி பந்தா காட்ட வேண்டும்.”அடேங்கப்பா , நம்ம மாப்ள பெரிய உத்தியோகத்துல இருக்காரு” என்ற உணர்வை அவருக்குக் கொடுக்க வேண்டும்.இது போன்ற சந்தர்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அவரும் ஊருக்குச் சென்று நம் அருமை பெருமைகளை எல்லாம் அனைவரிடமும் சொல்லிவிடுவார்.பிறகு , மாமனார் வீட்டு சைடில் இருந்து எந்தப் பிரச்சனையும் வராது. இத்துனையும் சமாளிக்க வேண்டும் என்றால் லேசுப்பட்ட காரியமில்லை.

சரி , இப்படி எல்லாம் வேலை செய்வது ஏதோ கடமைக்காகச் செய்கிறோம் என்று நிச்சயம் செய்வதில்லை.காலையில் இருந்து குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு நம்மால் முடிந்த இது போன்ற சிறு சிறு வேலைகளைச் செய்யலாமே என்ற விருப்பமும் அதில் இருக்கிறது.

மற்ற ஆண்களைப் பார்க்கும்பொழுது நான் செய்யும் இந்த உதவி எல்லாம் பெரிய விசயமே இல்லை என்பது எனக்குத் தெரியும்.என்னை கண்டிப்புடன் வற்புறுத்தி எல்லாம் இந்த வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும் என்றும் அவள் சொல்வதில்லை.பாவம் அவர்களும் மனிதர்கள்தானே , நாமும் கொஞ்சம் உதவி செய்வோம் என்ற எண்ணம்தான்.

வீட்டில் பெண்களுக்கு உதவி செய்வதில் எந்தவித ஈகோவும் கிடையாது என்பது தெரிந்திருந்தாலும் நமக்குத்தான் உடம்பு வளைவதில்லை. உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் ஆண்களை விட பெண்களே பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை அவ்வப்போது செய்வோம் , அதில் தவறேதும் இல்லை.பெண்கள் வீட்டின் கண்கள் , ஆம் ஆம் ஆம்.மீண்டும் சந்திப்போம்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

3 Responses to பெண்கள் நம் கண்கள்

 1. பெண்கள் நம் கண்கள் – வீட்டில் பெண்களுக்கு உதவி செய்வதில் எந்தவித ஈகோவும் கிடையாது என்பது தெரிந்திருந்தாலும் நமக்குத்தான் உடம்பு வளைவதில்லை. உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் ஆண்களை விட பெண்களே பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை அவ்வப்போது செய்வோம் , அதில் தவறேதும் இல்லை.பெண்கள் வீட்டின் கண்கள் , ஆம் ஆம் ஆம்.மீண்டும் சந்திப்போம்.- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Kathirvel Subramaniam.

  Liked by 2 people

 2. பெண்கள் நம் கண்கள் – வீட்டில் பெண்களுக்கு உதவி செய்வதில் எந்தவித ஈகோவும்
  கிடையாது என்பது தெரிந்திருந்தாலும் நமக்குத்தான் உடம்பு வளைவதில்லை. உடல்
  ரீதியாகவும் , மன ரீதியாகவும் ஆண்களை விட பெண்களே பல பிரச்சனைகளைச்
  சந்திக்கின்றனர்.அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை அவ்வப்போது செய்வோம் ,
  அதில் தவறேதும் இல்லை.பெண்கள் வீட்டின் கண்கள் , ஆம் ஆம் ஆம்.மீண்டும்
  சந்திப்போம்.- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Kathirvel
  Subramaniam

  2015-04-27 23:55 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “குழந்தையை ஒரு நாள் முழுக்க
  > பார்த்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் என்று மனைவியார் சபதம் போடுகிறார்.குழந்தையை
  > குளித்து விடுவதில் இருந்து , குழந்தை உச்சா போனாலும் , சுச்சா போனாலும்
  > அனைத்தும் நம் பொறுப்புதான்.நீங்கள் மட்டும் இதைச் செய்து காட்டுங்கள்
  > உங்களுக்கு அமை”

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s