உங்களுக்கு நல்ல சாவு இல்லடா

theftஈரோடு திண்டல் பகுதி.அதிகாலை மூன்று மணி.அப்பொழுது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அந்த மூவரும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.மூன்று மணிக்கு கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிட்டான் முதல் ஆள்.கதவு திறந்த சத்தம் கேட்டவுடனேயே அந்தப் பெண் கண் விழித்துக்கொண்டார்.

உள்ளே நுழைந்தவன் திருடன் என்று மட்டும் அவருக்கு உறுதியாகிவிட்டது.பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை எழுப்பி விடலாம் என்று நினைத்த அடுத்த நொடியில் இரண்டாவது ஆளும் வீட்டினுள் நுழைந்துவிட்டான்.குழந்தையும் உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஒருவனாக இருந்தால்கூட ஏதாவது சமாளித்திருப்பார்களோ என்னவோ , வந்தவர்கள் இரண்டு பேர் என்பதால் இவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை.வந்தவர்கள் என்று சொல்வதைவிட கேடுகெட்ட பொறுக்கிகள் என்று சொன்னால் இங்கே பொருத்தமாக இருக்கும்.இருவருக்கும் சுமார் 30 வயதிருக்கும்.

உள்ளே நுழைந்த இரண்டு பொறுக்கிகளும் மூவரையும் எழுப்பி விட்டு ஐம்பது பவுன் நகையும் , முப்பதாயிரம் ரூபாய் பணத்தையும் முதலில் எடுத்துக்கொள்கிறார்கள்.பிறகு , அந்தப் பெண்ணிடம் கழுத்தில் “தாலி” இல்லை என்பதால் “எங்கே வைத்திருக்கிறாய்” என்று கேட்டிருக்கிறார்கள்.

கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டியிருந்த அந்தப் பெண் “என்னிடம் தாலி இல்லை” என்று சொல்லி சமாளிக்கப் பார்த்திருக்கிறார்.அதை நம்பவில்லை அந்த பொறுக்கிகள் .பிறகு அவர்களை மிரட்டி, மறைத்து வைத்திருந்த தாலியையும் பிடுங்கிக் கொள்கிறார்கள்.அதோடு சேர்த்து மொத்தம் அறுபது பவுன் தங்கம் கிடைத்துவிட்டது.

அப்பொழுதுதான் கணவன் அந்த பொறுக்கிகளிடம் “உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா ,  நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் , தாலியை மட்டும் விட்டுவிடுங்கள்” என்று காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்.

அதற்கு அந்தப் பொறுக்கிகள் அளித்த பதில்தான் எப்படிப்பட்ட சாதுவாக இருந்தாலும் கோபத்தின் உச்சத்துக்கே செல்லும் அளவிற்கு இருக்கிறது.

அவர் “உங்களுக்கு மனசாட்சி இல்லையா” என்று கெஞ்சியவுடன் “எங்களுக்கு  மனசாட்சியும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை , எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது , எங்களையும்  நம்பி வீட்டில் மனைவி , குழந்தைகள் இருக்கிறார்கள் , அவர்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் பதில் அளித்ததோடு இல்லாமல் , தாங்கள் செய்தது ஏதோ இந்த தேசத்திற்குச் செய்த புண்ணியச் செயல் என்ற ரீதியில் நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.

அதோடு அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்து பைக்கை எடுத்துக்கொண்டு குறைந்த பட்சம் அந்த மூன்று உயிர்களையும் ஒன்றும் செய்யாமல் சென்றிருக்கிறார்கள்.

சம்பவம் நடந்து சில நாட்களே ஆகியிருக்கிறது.இன்னமும் அந்தக் குடும்பம் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.சொந்த வீடு கட்டி ஒரு வருடத்திற்கு முன்புதான் குடி புகுந்தார்கள். எங்களுக்கும் தெரிந்தவர்கள் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு நானும் கூட அந்தப் புதுவீட்டிற்குச் சென்று வந்திருந்தேன்.சந்தோசமாக இருந்த அந்தக் குடும்பத்திற்கு இது மிகப் பெரிய அதிர்ச்சிதான்.

இது போன்ற தொழில் செய்வதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.இப்படி திருடிய தாலியை மனைவியிடம் கொடுத்து அதை வைத்து குடும்பம் நடத்தச் சொல்பவனுக்கு , மனைவியின் தாலி மட்டும் எத்துனை நாட்களுக்கு கழுத்தில் நிரந்தரமாக இருந்துவிடப்போகிறது என்பதை யோசிக்கும் அளவிற்கு எல்லாம் மூளை நிச்சயம் இருக்காது.

இன்றைக்கு சாதனை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் இவர்கள் நினைத்துக்கொள்ளலாம்.இவர்களுக்கெல்லாம் பூமியில் இருந்து மேலே செல்லும் காலம் விரைவில் வந்துவிடும் , அதையும் கூட அவர்களே தேடிக்கொள்வார்கள்.

குற்றம் செய்ததோடு இல்லாமல் அதை எப்படி நியாயப்படுத்தி இருக்கிறார்கள் பாருங்கள்.நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு இதைவிட ஒரு சம்பவம் தேவையா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம்.தட்ஸ் ஆல்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

3 Responses to உங்களுக்கு நல்ல சாவு இல்லடா

 1. வேதனையாக இருக்கிறது.

  Liked by 1 person

 2. A RAVI says:

  இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரே அளவு ஞானம் இருப்பதில்லை. அனாலும் எதைப் படித்தாலும் வேலையில்லை. தனியாரிடம் வேலை செய்து பிழைக்க திருப்பூர், கோவை என்று அலையவேண்டும். பஸ்சில் சென்று வந்த காலம் போச்சு ! கட்டணம் அப்படி. உள்ளுரில் செய்து கொண்டிருந்த எடுபிடி வேலைக்கும் வடநாட்டுக்காரர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். நமது முதலாளிகள் குறைந்த கூலி, குடும்பம் முழுவதும் வேலை என்பதால் பக்கத்தில் குடிசை போட்டுக் கொள்ள அனுமதிக்கிறார்கள். வேலை காலி போர்டே ஹிந்தியில் தான். சந்தையில் வியாபாரிகள் நம்மைத் தள்ளச் சொல்லி அவர்களுக்கு இந்தியில் ” ஆவோ, தஸ் ருப்யே, ” என்று அவர்களுக்குத் தான் விற்கிறார்கள்.கிராமங்களில் வடநாட்டுக் காரர்களின் நடமாட்டம் தான் அதிகம். கொஞ்ச காலம் முன் இரண்டு வாலிபர்கள் திருப்பூரிலிருந்து காரைத் திருடிக்கொண்டு ஆட்டங்காடியதும் சென்னிமலையில் அரஸ்ட் ஆனதும் இப்படித்தான். வேலை இல்லை. கையில் கத்தியும், குடித்துக் குடித்து இரக்கமே இல்லாத இருதயமும் கொண்ட ஒரு சமுதாயமே உருவாகிக் கொண்டிருக்கிறது. கொள்ளையிட்டு கொண்டுபோகும் பொருளில் பகுதி கூட வீட்டிற்குப் போகாது. குடி, குடி, குடி …இனி எத்தனை தாலிகள் களவாடப் படுமோ ? பறிக்கப் படுமோ ? அறுக்கப் படுமோ ? கொஞ்சங் கொஞ்சமாய் பெண்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது. முடிவு ????

  Liked by 1 person

  • தெளிவாகச் சொன்னீர்கள் சார்.இன்றைய சமுதாயம் இறக்க குணம் குறைந்து குற்றம் செய்யத் துணிந்த சமூகமாக மாறிவருகிறது.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s