அதிகரிக்கும் ஐ.டி. துறை மரணங்கள்

23அமெரிக்காவில் பணி புரியும் அலுவலக நண்பர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்திருக்கிறார்.நாங்கள் இருவரும் நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரே ப்ராஜெக்டில் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்தோம்.ஆந்திராக்காரர்.நாங்கள் ஒன்றாய் வேலை செய்தது வெறும் ஆறு மாதங்கள் என்றாலும் அமெரிக்கா சென்ற பிறகு இன்னும் என்னை மறக்காமல் நட்பைத் தொடர்கிறார்.

இருவரும் ஒரே நிறுவனத்தில்தான் இன்றும் வேலை செய்கிறோம். அடிக்கடி நாங்கள் பேசிக்கொள்ளா விட்டாலும் அவ்வப்பொழுது நண்பர் அங்கிருந்து போனில் அழைத்து நலம் விசாரித்துவிடுவார்.

பெங்களூர் வந்திருந்த நண்பரும் நானும் நேற்று மதியம் சந்திப்பது என்று திட்டம் போட்டு , அதன்படியே சந்தித்து , பிறகு மதிய உணவிற்கு வெளியில் சென்றோம்.குடும்பம் சம்பந்தமான விசாரிப்புகள் முடிந்து அவருடைய அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.அப்பொழுதுதான் அந்த சோகமான சம்பவத்தைக் கூறினார் நண்பர்.

நண்பரின் மானேஜருக்கு வயது 39.அவரும் ஆந்திராக்காரர் , வசித்தது அமெரிக்காவில். திருமணம் செய்தது சென்னைப் பெண்ணை .காதல் திருமணமா என்பது தெரியவில்லை.தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகள். புகை மற்றும் மதுப் பழக்கம் உண்டாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதயக் கோளாறு சம்பந்தமாக மருத்துவரைச் சந்தித்து ஆஞ்சியோ செய்து மருத்துவரின் அறிவுரைகளைப் பெற்றிருக்கிறார் நண்பரின் மேலதிகாரி.ஆனால் , மருத்துவரின் அறிவுரைகளை சரியாகப் பின்பற்றவில்லை.சரியான நேரத்திற்கு தூங்குவதில்லை ,புகை மற்றும் தினமும் மதுப் பழக்கம் என்று எதையும் விடவில்லை அவர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பணிச் சுமையும் , அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் வேறு..டி. துறையில் பணிச் சுமையும் , மன உளைச்சலும் ஒன்றும் புதிதல்ல.மாரடைப்பிற்கான ஆரம்ப கால அறிகுறிகளை பொருட்படுத்தவில்லை அவர்.ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார்.இருந்தாலும் பொருட்படுத்தவில்லை.

அன்றைக்கும் வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்து கொண்டிருந்தவர் தன் மூத்த மகன் தனது அறையில் விளையாடி தொந்தரவு செய்ததால் அவனை சத்தம் போட்டு வெளியில் அனுப்பி இருக்கிறார்.அடுத்த சில நிமிடங்களிலேயே பாத்ரூமில் இறந்து கிடந்திருக்கிறார்.இந்தச் சம்பவம் அமெரிக்காவில் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. மாரடைப்பால் இறந்திருப்பார் என்று மட்டும் யூகிக்கிறார்கள்.

இறந்தவரின் மனைவிக்கு பெற்றோர்கள் கிடையாது.இறந்தவரின் அம்மாவும் கடந்த வருடம் இறந்துவிட்டார்.இப்பொழுது இரண்டு குழந்தைகளுடன் ஆந்திராவில் தன் கணவரின் சொந்த மண்ணிற்கே சென்றுவிட்டார் அந்தப் பெண்.மாமனார் மட்டும் அங்கே வசிக்கிறார்.அவர்தான் இனி இந்த பாவப்பட்ட பெண்ணுக்கும் , இரண்டு குழந்தைகளுக்கும் ஆதரவு.அவருக்கும் கூட வயதாகி விட்டது.

எங்கள் நிறுவனத்தில் ஓரளவு அவருக்கு நிதி உதவி அளித்திருக்கிறார்கள் என்றாலும் இரண்டு குழந்தையையும் தனியாக ஒரு பெண் வளர்த்து ஆளாக்குவது என்பது மிகப் பெரிய சவால்தான்.35 வயதான அந்தப் பெண்ணிற்கு வாழ்க்கையில் கடக்க வேண்டிய பாதை ஏராளம் ஏராளம்.

இந்த துயர சம்பவத்தைக் கேட்டபோது எனக்கு அந்த இறந்தவரின் மேல்தான் கோபம் வந்தது.இதய நோய் உள்ள ஒருவர் எந்த அளவிற்கு உணவுப் பழக்கவழக்கத்தை சரியாக வைத்திருக்க வேண்டும்.அதிலும் , புகை பிடிப்பதும் மது அருந்துவதும் எவ்வளவு ஆபத்தான காரியம்.படித்த அவருக்கு என்னதான் மன உளைச்சல் இருந்தாலும் தன்னை நம்பி மனைவி , மக்கள் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு புகையும் , மதுவும் கண்ணை மறைத்துவிட்டது .இப்பொழுது குடும்பத்தை தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஏற்கனவே பெற்றோர்களை இழந்த அந்தப் பெண்ணிற்கு கணவனும் இல்லை என்றால் அவள் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பாள் என்பதை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நம் உடலும் , குடும்பமும் நம் வேலையை விட மிக மிக முக்கியம்.நம்பிக்கை உள்ளவனுக்கு பிழைத்துக்கொள்ள ஆயிரம் வேலைகள் இருக்கிறது.தன் உடம்பைக் கெடுத்துக்கொண்டு , மனைவி மக்களை அனாதைகளாக்கி விட்டுப் போகும் அளவிற்கு ஒருவனுக்கு மன உளைச்சல் ஏற்படும் வேலை இருக்கிறது என்றால் அப்படிப்பட்ட வேலையை தூக்கி எறிந்துவிட்டு வரும் வேலையைத்தான் நானாக இருந்தால் செய்திருப்பேன்.

எங்களுக்கும் மன உளைச்சல் இருக்கத்தான் செய்கிறது , உயிரைப் பறிக்கும் அளவிற்கெல்லாம் இல்லை என்பதால் சமாளித்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டுகின்றோம்.

பாவம் , அவருடைய ஆத்மா சாந்தியடையவும் , துன்பத்தை  அனுபவிக்கும் அந்தப் பெண்ணிற்கு ஆண்டவன் திடமான மனநிலையைக் கொடுக்க வேண்டியும்  நாம் வேண்டிக்கொள்வோம் .அது மட்டுமே  நம்மால் முடியும் . 

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s