“ரமணா” மருத்துவமனைகள்

Ramana doctorsஅப்பொழுதுதான் நான் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தேன்.கணினியை ஆன் செய்தவுடன் மனைவியிடம் இருந்து போன் வருகிறது.அவளும் அப்பொழுது அலுவலகத்தில் இருக்கிறாள். வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாகவும் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள்.அப்பொழுது அவள் ஆறு மாதக் குழந்தையை சுமந்து கொண்டிருந்தாள்.

எப்படியோ சமாளித்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டாள்.நானும் உடனே கிளம்பி விட்டேன்.வீட்டிலிருந்து உறவினர் மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.நான் அதற்குப் பிறகு மருத்துவமனை செல்கிறேன்.

எமெர்ஜென்சி என்பதால் சென்றவுடன் டாக்டரைப் பார்த்துவிட்டோம்.”எங்கே செக் அப் செய்றீங்க” என்றார் டாக்டர்.நான் மாதா மாதம் ஈரோடு சென்று  அங்குதான்  பார்க்கிறோம் என்கிறேன்.உடனே என் மீது கோபப்படுகிறார் அந்த டாக்டர் பெண்மணி.”உங்கள யாரு இப்படி பயணம் செய்யச் சொன்னது , இப்ப பாருங்க இவங்க வலியில கஷ்டப்படுறாங்க” என்று திட்டுகிறார்.

“மேடம் , நாங்கள் பார்க்கும் ஈரோடு டாக்டர் மாதம் ஒரு முறை ரயிலில் பயணம் செய்வதில் பிரச்சனை இல்லை என்றார் , அதனால்தான் ஊரிலேயே பார்க்கிறோம்” என்றேன்.என் பதிலை அவர் காது கொடுத்துக் கேட்கவில்லை.

“சரி , இப்ப  உடனே  ரெண்டு இன்ஜக்சன் போடணும் , வலி ரொம்ப அதிகமா இருக்கு உங்க மனைவிக்கு , இப்பவே அட்மிட் பண்ணுங்க”  என்கிறார்.

“மேடம் , என்னன்னே தெரியாம என்ன இன்ஜக்சன் போடறீங்க” என்று சற்று கோபமாகத்தான் கேட்டேன் நான்.

“சார் , நீங்க ட்ராவல் செய்ததுதான் பிரச்சனை , அதனால்தான் உங்க மனைவிக்கு வலி வந்திருக்கு , முதல்ல நாம இன்ஜக்சன் போடுவோம் , அப்புறம் மற்ற ட்ரீட்மென்ட் என்னன்னு பாக்கலாம்” என்றார் டாக்டர் பெண்மணி.

நான் ஒரு இரண்டு நிமிடம் கொடுங்கள் என்று  சொல்லிவிட்டு மனைவியுடன் வெளியில் வந்து பேசிக்கொண்டிருக்கின்றேன்.உடனே அங்கே ஒரு பரபரப்பை உண்டாக்குகிறார்கள். அங்கும் இங்கும் நர்சுகள் ஓடுகின்றனர்.என்னிடம் வந்து “சார் சீக்கிரம் கவுண்ட்டரில் பணம் கட்டுங்க , லேட் செய்யக்கூடாது” என்கிறார் ஒரு நர்ஸ்.மற்றொரு நர்ஸ் ஸ்ட்ரெட்சரை சீக்கிரம் கொண்டுவரச் சொல்கிறார்.ரமணா படத்தின் நேரடி ஒளிபரப்பை அன்றுதான் நான் பார்க்க முடிந்தது.

இவர்களை நம்ப முடியவில்லை , நாம் பக்கத்தில் இருக்கும் FORTIS மருத்துவமனைக்குச் சென்றுவிடலாம் என்று நானும் மனைவியும் உறவினரும் பேசி ஒரு முடிவெடுத்துவிட்டோம்.அங்கு எங்களுக்குத் தெரிந்த மற்றொரு உறவினர் வேலை செய்துகொண்டிருந்தார் என்பதால் அங்கேயே சென்றுவிடலாம் என்று உறுதியானது.

டாக்டருக்குத் தெரிந்தவுடன் “தெரிந்தே நீங்கள் ரிஸ்க் எடுக்குறீங்க” என்றார்.நான் அதை பொருட்படுத்தவில்லை.என்ன பிரச்சனை என்றே தெரியாமல் வயிற்றில் குழந்தை இருக்கும்போது வலிக்காக ஊசி போட வேண்டும் என்று குருட்டுத்தனமாகச் சொன்னால் அவர்கள் மேல் எப்படி நம்பிக்கை வரும்.அதுவுமில்லாமல் பணத்திற்காக ரமணா படத்தில் வரும் முக்கால்வாசிக் காட்சிகளை அவர்கள் அங்கு அரங்கேற்றியது எங்களுக்கு நிறைய பயத்தைக் கொடுத்தது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் FORTIS மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம்.உடனே ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் , அதற்குப் பிறகு என்ன ட்ரீட்மென்ட் என்று பார்ப்போம் என்றார் டாக்டர்.மனைவி வலியை பொறுத்துக்கொண்டாள்.45 நிமிடத்தில் இரண்டு ஸ்கேனும் முடிந்து ரிப்போர்ட்டும் வந்தது.

ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டரின் முகத்தில் அதிர்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை.அவரின் முகத்தைப்  பார்த்த எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு கிடைத்தது.

“உங்களுக்கு பயப்படும்படியா ஒண்ணும் இல்லீங்க , ஸ்டோன் பிரச்சனை , அதுதான் வலி அதிகமா இருக்கு , இதுக்கு ட்ரீட்மென்ட் எல்லாம் எதுவும் இல்லை , நிறைய தண்ணி குடிங்க , சில நாட்களில் ஸ்டோன் சிறுநீரில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வெளியில் வந்துவிடும்” என்றார் டாக்டர்.

“டாக்டர் ஏதாவது டேப்லட் சாப்பிடணுமா” என்றேன்.

கர்ப்பமாக  இருப்பதால் பிரசவம் ஆகும் வரை இதற்கு எந்த மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டாம் , அதற்குப் பிறகு இந்த பிரச்சனை இருந்தால் அப்பொழுது பார்ப்போம்” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.அவ்வளவுதான். நாங்களும் வீட்டிற்கு வந்துவிட்டோம் .இரண்டு நாட்களில் அதிகம் தண்ணீர் குடித்தே வலியும் நின்றது.இப்பொழுதும் மனைவிக்கு ஸ்டோன் பிரச்சனை இல்லை.

மருத்துவர்கள்  தெய்வத்திற்கு சமமானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தெய்வமாக மதிக்கத்தக்க மருத்துவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்றாலும் இன்றைக்கு மருத்துவத்துறையை பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் நிறுவனமாகத்தான் நிறையப் பேர் பார்க்கிறார்கள்.

நாங்கள் முதலில் பார்த்த அந்த டாக்டரும் அந்த மருத்துவமனையை ஆரம்பித்து அப்பொழுதுதான் சில மாதங்கள் ஆகியிருந்தது.சீக்கிரம் போட்ட காசை எடுத்துவிட வேண்டும் என்ற அவருடைய  தொழில் புத்தி அவருடைய பேச்சில் நன்றாகவே தெரிந்தது.ஆறு மாத கற்பமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு எந்தவொரு பரிசோதனையும் செய்யாமல் உடனடியாக  வலி நிவாரணி கொடுக்க வேண்டும் என்று எந்தவொரு டாக்டரும் சொல்லிவிட மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

தெய்வத்தை மனித ரூபத்தில் நாம் பார்க்கலாம் என்றால் அது டாக்டர்கள்தான்.மருத்துவம் ஒரு புனிதமான துறை.அப்படிப்பட்ட புனிதத்தை கெடுக்கும் சில வியாபாரிகள் இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் விஷயம்.நல்ல டாக்டரிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட நாம் இன்றைக்கு வேண்டிக்கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கிறது.மீண்டும் சந்திப்போம்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to “ரமணா” மருத்துவமனைகள்

  1. “ரமணா” மருத்துவமனைகள் = தெய்வத்தை மனித ரூபத்தில் நாம் பார்க்கலாம் என்றால் அது டாக்டர்கள்தான்.மருத்துவம் ஒரு புனிதமான துறை.அப்படிப்பட்ட புனிதத்தை கெடுக்கும் சில வியாபாரிகள் இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் விஷயம்.நல்ல டாக்டரிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட நாம் இன்றைக்கு வேண்டிக்கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கிறது.மீண்டும் சந்திப்போம்.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

    Liked by 1 person

  2. Reblogged this on rathnavelnatarajan and commented:
    “ரமணா” மருத்துவமனைகள் = தெய்வத்தை மனித ரூபத்தில் நாம் பார்க்கலாம் என்றால் அது டாக்டர்கள்தான்.மருத்துவம் ஒரு புனிதமான துறை.அப்படிப்பட்ட புனிதத்தை கெடுக்கும் சில வியாபாரிகள் இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் விஷயம்.நல்ல டாக்டரிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட நாம் இன்றைக்கு வேண்டிக்கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கிறது.மீண்டும் சந்திப்போம்.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

    Liked by 1 person

  3. “ரமணா” மருத்துவமனைகள் = தெய்வத்தை மனித ரூபத்தில் நாம் பார்க்கலாம் என்றால்
    அது டாக்டர்கள்தான்.மருத்துவம் ஒரு புனிதமான துறை.அப்படிப்பட்ட புனிதத்தை
    கெடுக்கும் சில வியாபாரிகள் இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது வேதனை
    தரும் விஷயம்.நல்ல டாக்டரிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட நாம் இன்றைக்கு
    வேண்டிக்கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கிறது.மீண்டும் சந்திப்போம்.= எனது
    பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

    2015-06-08 17:17 GMT+05:30 ” நிதர்சனம்” :

    > Kathirvel Subramaniam posted: “அப்பொழுதுதான் நான் அலுவலகம் வந்து
    > சேர்ந்திருந்தேன்.கணினியை ஆன் செய்தவுடன் மனைவியிடம் இருந்து போன்
    > வருகிறது.அவளும் அப்பொழுது அலுவலகத்தில் இருக்கிறாள். வயிற்றுப் பகுதியில்
    > கடுமையான வலி இருப்பதாகவும் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் கிட்டத்தட்ட
    > அழுதுவிட்”

    Liked by 1 person

  4. DD says:

    நல்லவேளை தப்பிச்சீங்க , மொதல்ல ஸ்கேன் எடுத்துதான் என்ன வலின்னு கண்டுபிடிப்பாங்க ..எனக்கும் அப்படிதான் எடுத்தாங்க .

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s