ஹெல்மெட் போடுங்க பாஸ்

1235அந்த நபருக்கு அறிமுகமான டாக்டர்தான்.அவரிடம் சென்று போலீசிடம் இருந்து ஹெல்மெட் அணியாமல் தப்பிக்க தனக்கு தலையில் பிரச்சனை இருப்பதால் ஹெல்மெட் அணிய முடியாது என்று எழுதி போலியான ஒரு மெடிக்கல் சர்டிபிகேட் தரும்படி கேட்கிறார் அந்த நபர்.ஹெல்மெட் உங்கள் உயிரைக் காக்கும் கவசம் , நல்ல விசயம்தானே ஹெல்மெட் போட்டுச் செல்லுங்கள் , உங்களைப் போலவே ஏற்கனவே பத்துப் பேர் என்னிடம் வந்து போலியான மெடிக்கல் சர்டிபிகேட் தரும்படி கேட்டு நான் மறுத்துவிட்டதால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்று டாக்டர் சொல்லிவிட அந்த நபரும் அங்கிருந்து திரும்பிவிட்டார்.இப்பொழுது வேறு வழியின்றி ஹெல்மெட்டும் வாங்கிவிட்டார்.

சட்ட திட்டங்கள் எப்பொழுதும் நமக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.ஆனால் , எங்கு குற்றம் நடந்தாலும் நம் குரலை உயர்த்துகின்றோம்.அரசாங்கமும் , அரசியல்வாதிகளும் நமக்கு சாதகமான திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கின்றோம்.ஆனால் , நாம் மட்டும் நம் இஷ்டப்படிதான் நடக்க வேண்டும் என்று நமக்கு நாமே நீதிபதிகள் ஆகிவிடுகின்றோம்.

ஹெல்மெட் விஷயத்தைப் பொருத்தவரை அது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.நம் உயிரைக் காக்க நீதிமன்றம் ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாம் என்ன செய்கின்றோம் என்றால் குறுக்கு வழியில் அந்த சட்டத்தை மீற முயற்சி செய்கின்றோம்.நம் உயிரைக் காக்க கொண்டு வந்த ஒரு கட்டாய சட்டத்தையே மதிக்கத் தெரியாத நாம் , நம் மீதே குறைகள் இருக்கும்போது அரசாங்கத்தையும் , அவர்களால் கொண்டு வரும் சட்ட , திட்டங்களையும் விமர்சிக்கும் தகுதியற்றவர்களாகிறோம் என்றுதான் நினைக்கத் தோனுகிறது.

நேற்றிரவு மனைவியை ஊருக்கு பேருந்தில் அனுப்பி வைப்பதற்காக மடிவாலா வரை செல்ல வேண்டியிருந்தது.அங்கு நண்பர் ஒருவரைச் சந்திக்க முடிந்தது.அவரும் ஈரோட்டுக்காரர்தான்.இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் ஈரோட்டில் இருந்து பெங்களூர் வரும்பொழுது பேருந்தில் நாங்கள் இருவரும் நண்பர்களானோம்.

நண்பர் வாரா வாரம் சனி , ஞாயிறு விடுமுறை நாட்களில் தவறாமல் ஊருக்குச் சென்றுவிடுவார்.நாங்கள் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஊருக்குச் சென்றுவிடுவதால் நண்பர் செல்லும் அதே டிராவல்ஸில்தான் கடந்த சில மாதங்களாகச் செல்கிறோம்.அதனால் இப்பொழுதெல்லாம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நண்பரை தவறாமல் அதே டிராவல்ஸில் பார்த்து விடுகின்றேன்.

நேற்றிரவு மனைவியை ஊருக்கு அனுப்பி வைக்கச் சென்றபோது நண்பரும் அந்த ட்ராவல்ஸ் அலுவலகத்தில் இருந்தார்.”என்னங்க இப்பெல்லாம் தினமும் ஊருக்குப் போயிட்டு வரீங்களா என்ன , இன்னைக்குப் போறீங்க , புதன்கிழமையாச்சே ?” என்று கிண்டலாகக் கேட்க “இல்ல கதிர் , அப்பாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஆஸ்பத்திரில இருக்காங்க , டூ வீலர்ல வந்து வாகனம் ஒன்று மோதிவிட்டது , காலுல நல்ல பிராக்ச்சர் ஆயிடுச்சு , ஆப்பரேசன் செய்யணும் போலிருக்கு , ஈரோட்டுலதான் அட்மிட் பண்ணி இருக்காங்க , அதனாலதா இன்னைக்கு ஊருக்குப் போறனுங்க” என்றார்.

வருத்தத்தில் இருந்த நண்பர் விபத்து ஏற்பட்டிருந்தாலும் ஒரு வகையில் சந்தோசப்பட்டார்.”பரவா இல்ல கதிர் , அப்பா வண்டியில இருந்து கீழ விழுந்த உடனே கால் முட்டியிலும் , தலையிலும் நல்லா அடி பட்டிருக்கு , தலைக்கு ஹெல்மெட் போட்டிருந்ததால ஒரு பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சுட்டாங்க , இல்லீன்னா விழுந்த வேகத்துக்கு தலையில பலமா அடி பட்டிருக்கும் , ஹெல்மெட்னால தப்பிச்சுட்டாங்க” என்றார்.ஹெல்மெட் தன் அப்பாவை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

ஹெல்மெட்டின் அவசியத்தைப் புரிந்துகொண்ட இவரைப் போன்றவர்கள் ஒரு பத்துப் பேரிடம் சொன்னால் , அந்தப் பத்துப் பேர் ஆளுக்குப் பத்துப் பேரிடம் சொன்னால் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குப் புரிய வரும்.அப்படியாவது புரிய வரும் என்பதே சரியாக இருக்கும்.

என்னதான் “தலைக் கவசம் உயிர் கவசம்” , “ஹெல்மெட் உங்கள் உயிர் காக்கும் நண்பன்” என்று நாம் சொன்னாலும் அதன் முக்கியத்துவம் புரிய வேண்டியவர்களுக்கு மட்டுமே புரியும்.நாம் எதையும் யார் மீதும் திணிக்க முடியாது.அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.சொல்வோம் , கேட்போர் கேட்கட்டும்.

எல்லாம் நமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணம் என்றைக்கு நம்மை விட்டுப் போகிறதோ அன்றைக்கு வேண்டுமானால் இங்கே மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அதைப் பற்றிப் பேசலாம் . அதுவரை , நீங்களும் நானும் இப்படி எழுதிக் கொண்டு டைம் பாஸ் செய்யலாம் , அவ்வளவுதான்.

——– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

One Response to ஹெல்மெட் போடுங்க பாஸ்

  1. அருமையான பதிவு.
    நன்றி.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s