சகாயமும் கிரானைட்டும்

Sagayamதிரு.சகாயம் அவர்களைப் பற்றியெல்லாம் நாம் புதிதாக எதுவும் எழுதத் தேவையில்லை.அனைவருக்கும் தெரிந்த முகம்தான்.நேர்மையான முகம்.கூர்மையான முகம்.இப்படி இருந்தால் எப்படி ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கும்.நிச்சயம் பிடிக்காதுதானே.ஆட்சியாளர்களைப் பொருத்தவரை “கை சுத்தம்” என்று ஒருவர் பெயரெடுத்துவிட்டால் அவரை நாடு கடத்துவதைப் போல் இலாக்கா இலாக்காவாக இட மாற்றம் செய்வது வழக்கம்.அதைத்தான் இன்றுவரை அனுபவித்து வருகிறார் சகாயம்.

மதுரை ஆட்சியராக இருந்தபோது கிரானைட் முறைகேடுகளைப் பற்றிய அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்த சில நாட்களிலேயே இட மாற்றம் செய்யப்பட்டவர்.பிறகு ட்ராப்பிக் ராமசாமி அய்யாவின் முயற்சியால் நீதிமன்றத்தால் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மீண்டும் அதே மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்.அங்கு சென்றது முதல் இன்றுவரை அவர் சமாளிக்கும் கொலை மிரட்டல்கள் , அரசு இயந்திரத்தின் மூலம் மற்ற சவால்கள் என்று நிறையச் சொல்லலாம்.

இன்னும் சில நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க
இருந்தவர் தற்பொழுது நரபலி கொடுக்கப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க , அதை காவல்துறையும் வருவாய்த் துறையும் மறுக்க , அதற்காக இரவு முழுவதும் அதே இடுகாட்டில் போராட்டம் இருந்துதான் நேற்று காவல் துறையிடம் உதவியைப் பெற்றிருக்கிறார்.காவல் துறை என்பது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே தவிர இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கோ அல்லது இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ கிடையாது.

எங்கு விசாரணையில் பல அரசியல் தலைகளையும் அவர்களின் நாதாரித்தனத்தையும் வெளியில் கொண்டு வந்துவிடுவாரோ சகாயம் என்ற பயத்தில்தான் காவல் துறையை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது மாண்புமிகு அரசாங்கம்.

இதை விட நகைச்சுவையான செய்தி ஒன்று இருக்கிறது.சகாயம் ஒரு புகழ் விரும்பி , மீடியா வெளிச்சம் தேடுபவர் , தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தாண்டி வேலை செய்கிறார் என்று முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் சொல்கிறார். சகாயத்திற்கு இருக்கும் நற்பெயருக்கு இதற்கு மேல் மீடியா வெளிச்சம் தேவை இல்லை என்பது பலருக்கும் தெரியும்.அப்படியிருக்க அரசியல்வாதிகளைப் போல் புகழையோ , மீடியா வெளிச்சத்தையோ விரும்புவர் அல்ல சகாயம் என்பது சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆக , இதில் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது.நாமும் நல்லவர்களாக இருக்க மாட்டோம். சகாயத்தைப் போன்ற நல்ல அதிகாரிகளையும் வளர விட மாட்டோம்.இயற்கையை அழித்து நாட்டு மக்களை நாசமாக்க துணை நிற்போம் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள்.

நம் நாட்டில் அதிகார வர்க்கத்தோடு கைகோர்த்துக்கொண்டு நாதாரித்தனம் செய்தால் மட்டுமே அதிகாரிகளுக்கு மதிப்புண்டு.

சகாயத்தைப் போன்ற நேர்மையான அதிகாரிகளை எல்லாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறிய நாடு என்ற பெருமையை வரலாற்றுச் சுவடுகள் பிற்காலத்தில் சொல்லும் பாருங்கள்.

—- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s