செல்போனா உயிரா

Road Crossingகணவனும் மனைவியும் சாலையைக் கடக்க நிற்கிறார்கள்.கணவன் மகளை கையில் பிடித்திருக்கிறார்.மனைவி மகனை கையில் பிடித்திருக்கிறார்.காரணம் , அவர்கள் அவசரப்பட்டு ஓடிவிடுவார்களோ என்ற பயத்தில்.ஒரு கையில் மகனைப் பிடித்துக்கொண்டு மறு கையில் செல் போனில் பேசிக்கொண்டிருக்கிறார் மனைவி. இவர்களுக்குப் பக்கத்தில் பைக்கில் நானும் சாலையைக் கடக்க காத்துக்கொண்டிருக்கின்றேன்.வாகனங்கள் நிற்காமல் சென்றுகொண்டிருக்கின்றன.சில நிமிடங்கள் ஆகலாம்.

செல் போனில் பேசியபடியே இருந்த அந்தப் பெண் வாகனங்கள் குறைந்துவிட்டது சாலையைக் கடக்கலாம் என்ற நினைப்பில் தன் மகனை அழைத்துக்கொண்டு சாலையின் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு வேகமாக ஓடுகிறார்.அவருடைய கவனம் முழுவதும் செல் போனில்.சாலையில் ஒரு இடைவெளி விட்டு தொடர்ந்து வந்த வாகனங்களை பெரிதாக அவர் கவனிக்கவில்லை.

அதைக் கவனித்த அந்தப் பெண்ணின் கணவர் “போகாத போகாத” என்று சத்தம் போடுகிறார்.அதுவும் மனைவியின் காதில் விழவில்லை.அந்தப் பெண்ணின் நல்ல நேரம் கொஞ்சம் வேகமாக வந்த கார்க்காரர் அதே வேகத்தில் பிரேக் போட்டதால் தப்பித்தார்.இல்லை என்றால் அவரோடு சேர்த்து அவர்களுடைய குழந்தைக்கும் மிகப்பெரிய ஆபத்து நிச்சயம் நடந்திருக்கும்.

கார்க்காரர் வேகமாக பிரேக் போட்டு அவர்கள் இருவரையும் காப்பாற்றி விட்டார் என்றாலும் பின்னால் வந்த மற்றொரு கார் இவர் போட்ட பிரேக்கில் கட்டுப்படுத்த முடியாமல் இவருடைய காரில் மோதி டமார் என்ற சத்தம் கேட்ட பிறகுதான் அந்தப் பெண் திரும்பிப்பார்க்கிறார்.

கணவன் வேகமாக ஓடி மனைவியை திட்டுகிறார்.இரண்டு உயிரைக் காப்பாற்றிய கார்க்காரருக்கு எவ்வளவு தண்டச்செலவு என்று தெரியவில்லை.பெங்களூரில் இப்படி ஏதாவது வாகன விபத்து நடந்தால் அவர்களை சமரசம் செய்து பணத்தை ஆட்டையைப் போட ஒரு கூட்டமே இருக்கிறது.அதற்குப் பிறகு நடந்த காட்சிகளைக் காண எனக்கு நேரமில்லாததால் சென்றுவிட்டேன்.

இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால் “நம் உயிரை விடவும் மிக முக்கியமானது செல் போன்தான் , செல் போன்தான் , செல் போன்தான்” என்பதே.

எப்பொழுதும் சொல்வதைப் போல் “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்” என்று சொல்லிவிடுவது சாலச் சிறந்தது.

——- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s