நல்ல நண்பர்களோடு பழகுங்கள்

1மொத்தம் பத்துப் பேர்.அனைவரும் ஒன்றாகத்தான் பயணித்தோம்.இந்த பத்துப் பேரில் எட்டுப் பேர் அப்பொழுதுதான் கல்லூரியை முடித்திருந்தார்கள்.இதற்கு முன்பு நான் வேலை செய்த ஒரு நிறுவனத்தில் அப்பொழுதுதான் இந்த எட்டுப் பேரும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் சேர்ந்திருந்தார்கள். விளையாட்டுப் பருவம் நன்றாகவே தெரிந்தது.நாங்கள் எங்கு பயணித்தோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.இரவு பதினோரு மணிக்கு வேனை நிறுத்தச் சொல்லி ஓட்டுனரிடம் சென்று சொன்னார் அந்த எட்டுப் பேரில் ஒருவர்.

வேன் நகரைத் தாண்டி ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.இந்த எட்டுப் பேரும் வேனை விட்டுக் கீழே இறங்குகிறார்கள்.இறங்கியதும் ஒரே புகை மண்டலம்.அவர்கள் கொண்டுவந்திருந்த கஞ்சா அப்பொழுதுதான் அவர்கள் கையில் தஞ்சம் அடைந்திருந்தது.நானும் மற்றொரு அலுவலக நண்பரும் தனியாக கஞ்சாவின் வாடை தாங்க முடியாமல் நின்று கொண்டிருக்கின்றோம். எட்டுப் பேரும் கஞ்சாவின் போதையை ரசித்து ருசித்து புகையை வெளியில் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

போதை ஏற ஏற ஒருவருக்கொருவர் சிரித்துக்கொள்கிறார்கள். அவர்கள் சிரிப்பிற்கு காரணம் எதுவும் இல்லை.எதுவும் சொல்லிக்கொள்ளாமலேயே சிரித்துக் கொள்கிறார்கள்.கஞ்சா அவர்களுக்கு நல்லதொரு போதையையும் , ஆனந்தத்தையும் முழுதாகக் கொடுத்திருந்தது.என்னையும் நண்பரையும் கொஞ்சம் இழுத்துப் பார்க்கச் சொன்னார்கள்.எமனுக்கு முத்தமிட எங்களுக்கு விருப்பமில்லை.

அடுத்த நாள் அந்த எட்டுப் பேரில் ஒருவரிடம் சென்று “என்னப்பா இப்படி சர்வ சாதாரணமா கஞ்சா கிடைக்குதா பெங்களூருல” என்ற கேள்வியைக் கேட்டேன்.”நீங்க வேற கதிர் , இங்க காலேஜுல படிக்குற பசங்கள கேளுங்க எப்படி கிடைக்கும்னு தெளிவாச் சொல்வாங்க” என்றார்.

அப்பொழுது நான் பெங்களூர் வந்து பல வருடங்கள் ஆகியிருந்தது.அத்துனை வருடங்களில் அந்த அதிர்ச்சித் தகவல் எனக்கு அப்பொழுதுதான் கிடைத்தது.அதிர்ச்சி என்பது எனக்கு மட்டும்தானே தவிர அவர்களுக்கு இல்லை.

ஆக அவர் சொன்னதில் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது.கல்லூரி படிக்கும் வயதிலேயே கஞ்சாவிற்கு அடிமையாகும் கூட்டம் இங்கும் இருக்கிறது என்பது.இவர்களுக்கு சப்ளை செய்ய ரகசியமாக ஒரு கூட்டம் இயங்கிக் கொண்டிருக்கும்.எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க மாணவ சமுதாயம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது என்பதே இந்தக் கூட்டத்துக்கு பெரிய ப்ளஸ்.

மதுவும் , புகைப் பழக்கமும் கூட கெடுதல்தான் என்றாலும் கஞ்சாவின் பாதிப்பை விட அதிகம் பாதிப்பு மதுவிலும் , புகைப்பழக்கத்திலும் கிடையாது.இவை இரண்டில் இருந்தும் தீவிர முயற்சி இருந்தால் ஒருவரை வெளியில் கொண்டு வந்து விட முடியும்.ஆனால் கஞ்சா அப்படியில்லை.பெரும்பாலும் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் அதில் எல்லையைத் தொடும் போதுதான் வீட்டிற்கே தெரிய வரும்.அந்த நேரத்தில் அவர்களுக்கு உடலளவிலும் , மனதளவிலும் நிறைய இழப்புகள் வந்திருக்கும். அந்த போதையில் இருந்து வெளியில் வர முடியாத கட்டத்தில்தான் அவர்கள் இருப்பார்கள்.

நான் குறிப்பிட்ட இந்த எட்டுப்பேரும் அந்த அளவிற்கு எல்லாம் அடிமை ஆகவில்லை என்றாலும் தொடர்ந்து இந்தப் பழக்கம் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு வேறு வழியில் நிறைய பாதிப்பு வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை.

பள்ளியிலும் , கல்லூரியிலும் ஆசிரியருக்குப் பயந்த காலம் எப்பொழுதோ போய்விட்டது.ஆசிரியர் முன்னால் புகை விட்டவர்கள் நிறையப் பேர்.அதற்காக ஆசிரியரிடம் பயம் இருந்தால்தான் படிப்பு வரும் என்று சொல்ல வரவில்லை.ஆசிரியர்கள்தான் ஆசான்கள். அவர்கள்தான் நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் காட்டுபவர்கள்.அதற்காகவாவது கொஞ்சம் அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் வைக்கலாம்.இது இன்றைக்கு நிறைய மாணவர்களிடம் இல்லை என்பது வருத்தம்தான்.

இவர்களும்கூட கல்லூரியில் கற்றுக்கொண்ட இந்த தீய பழக்கத்தை இன்னும் விட முடியாமல் தவிப்பவர்கள்தான்.என்னைக் கேட்டால் கல்லூரிக் காலத்தில் இவர்கள் நல்ல நண்பர்களோடு சேரவில்லை என்றே சொல்வேன்.நல்ல நண்பன் ஒருபோதும் இதுபோன்ற வாழ்க்கையை அழிக்கக் கூடிய தீய பழக்கங்களுக்கு அழைத்துச் செல்ல மாட்டான்.கல்லூரிக் காலங்களில் அப்படி இப்படி என்று இருக்கத்தான் செய்யும் என்றாலும் இது போன்ற பழக்கங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். காரணம் இதில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியில் வர முடியாது என்பதே.

என்னோடு பயணித்த அந்த நண்பருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.எங்களுக்கும் மற்ற எட்டுப் பேருக்கும் சுமார் 12 வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கும். நிச்சயம் அவர்கள் எங்கள் தலைமுறை வயதுக்காரர்கள் இல்லை. நாங்கள் அடுத்த தலைமுறை எப்படி இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்தோம்.

“நாமெல்லாம் படித்தபொழுது கஞ்சா என்ற வார்த்தையைக் கேட்டது கூட இல்லீங்க , இன்றைக்கு பாருங்க சர்வ சாதாரணமா இந்தப் பசங்க பேசிக்குறாங்க” என்றார் என் நண்பர்.எங்களுக்கு கிழவன் ஆகும் வயதில்லை என்றாலும் இந்த 12 வயது இடைவெளியும் , இந்த 12 வருடத்தில் பள்ளி , கல்லூரிகளில் அரங்கேறி இருக்கும் ஒழுக்கக் கேடுகள் என்னென்ன என்பதையும் ஒரு பட்டியல் போட்டே சொல்லும் அளவிற்கு நிறைய மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

ஒரு புறம் படிப்பில் அசத்தி வரும் மாணவர்கள்.மற்றொரு புறம் தீய பழக்கங்களால் சீரழியும் மாணவ சமுதாயம்.இதில் ஆசிரியர்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் பிள்ளை போல்தான் நினைத்து கவனித்து வருகிறார்கள்.ஒரு கட்டத்துக்கும் மேல் அவர்களாலும் ஒன்று செய்வதற்கில்லை.

பள்ளியிலும் கல்லூரியிலும் நல்ல நண்பர்களுடன் சேர வேண்டும் என்பதை நம் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நாம் மறக்க வேண்டாம்.கஞ்சாவைப் போன்ற கொடிய தீய பழக்கங்கள் எளிதில் சுவாரசியத்தைக் கொடுக்கக்கூடியவை.அதே வேகத்தில் வாழ்க்கையையும் நாசமாக்கக்கூடியவை என்பதை புத்தியுள்ள மாணவ சமூகம் உணர்ந்துகொண்டால் மட்டுமே வருங்காலத் தூண்கள் அனைத்தும் பலமாக அமையும். மீண்டும் சந்திப்போம்.

—— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

One Response to நல்ல நண்பர்களோடு பழகுங்கள்

  1. maragatham says:

    nalla karuthu..thirundhinal avangaluku nalladhu..

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s