தாத்தா பாட்டி உறவு

thaaththaதினமும் காலையில் தன் தாத்தாவோடு விளையாட்டு மைதானத்திற்கு வந்துவிடுகின்றான் அந்த சிறுவன். வயது சுமார் பத்து இருக்கலாம்.வந்தவுடன் தன் தாத்தாவோடும் , தாத்தாவின் நண்பர்களோடும் சேர்ந்து ஷட்டில் விளையாடுவது அவனுடைய வழக்கம்.தாத்தாதான் அவனுக்கு ஷட்டில் விளையாடக் கற்றுக்கொடுத்தவர்.

இப்பொழுது அவரையே மிஞ்சும் அளவிற்கு விளையாட்டில் அசத்துகின்றான் சிறுவன்.இருவரும் நண்பர்களைப் போல் அவ்வப்பொழுது விளையாட்டிற்கு நடுவில் கை குலுக்கிக் கொள்வதும் உண்டு.தாத்தா , பேரன் இருவரின் அன்புப் பரிமாற்றத்தைப் பார்க்கையில் இன்னும் சிறிது நேரம் பார்க்க வைக்கும்.தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறான் சிறுவன்.

இன்றைக்கு எத்துனை குழந்தைகளுக்கு இப்படி தாத்தா பாட்டியோடு வளரும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று பார்த்தால் சதவீகிதம் குறைவுதான்.தனிக் குடித்தனம் , நகரத்தை நோக்கிய பயணம் என்று பல காரணங்கள் இன்றைக்கு நிறையக் குழந்தைகளை தாத்தா பாட்டி உறவுகளிடம் இருந்து பிரித்துவிட்டது.

பெற்றோர்களின் அன்பு , அரவணைப்பு , வழிகாட்டல் முக்கியம்தான் என்றாலும் தாத்தா , பாட்டியிடம் இருந்து கற்றுக்கொள்ளும் சில விஷயங்கள் பெற்றோர்களிடம் இருந்துகூட கற்றுக்கொள்ள முடியாது.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இது போன்ற இழப்புகள் இருக்கத்தான் செய்யும் என்றாலும் தாத்தா , பாட்டியோடு வளரும் குழந்தைகள் ஒருவிதத்தில் பாக்கியசாலிகளே.

——— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s