வைகோவின் அரசியல் எதிர்காலம்

vaikoகிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும்.அப்பொழுதுதான் வைகோ பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.அன்று முத்தூரில் இருந்து கிழக்கே கொடுமுடியை நோக்கிய நடைப் பயணத்தில் சிறிது நேரம் ஓய்வு தேவைப்பட்டதால் எங்கள் ஊரில் நடைப்பயணத்தை சிறிது நேரம் நிறுத்தியவரை சாலையை ஒட்டி இருக்கும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர் ம.தி.மு.க. வைச் சார்ந்த எங்கள் ஊர்க்காரர்கள்.

அப்பொழுது இரவு எட்டு மணி இருக்கும்.அப்பா அப்பொழுதுதான் உறங்கச் செல்ல வெளியில் கட்டிலைப் போட்டிருந்தார்.சாதாரண கயிற்றுக் கட்டில்தான்.எங்கள் வீட்டிற்கு வந்த வைகோ அதே கட்டிலில் படுத்து சுமார் அரை மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் தன் நடைப் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.தமிழக அரசியல் தலைவர்களுள் எனக்குப் பிடித்தவர்களில் வைகோவும் ஒருவர்.நான் ம.தி.மு.க. – வைச் சார்ந்தவன் இல்லை என்றாலும் அவரைப் பிடிக்கும். அன்றைய தினம் நான் பெங்களூரில் இருந்ததால் அவரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.இதை இங்கு குறிப்பிடக் காரணம் அவருடைய எளிமையும் , மக்களுக்காக மக்களை நேரிலேயே சந்திக்கும் அவருடைய குணத்தையும் குறிப்பிடவே.

தமிழகத்தில் மதுவிலக்கை முதலில் கையிலெடுத்து அதற்கான போராட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் வைகோதான்.மது விலக்கு மட்டுமில்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக இவர்மேல் பெரிய விமர்சனம் எதுவும் இல்லாமல் பேசப்பட்டவரும் இவர்தான்.இதெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்புவரைதான்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க – வைப் பகைத்துக்கொண்டார்.தேர்தலிலும் போட்டியிடவில்லை.கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொள்கை ரீதியான சில சமரசங்களைச் செய்து கொண்டு பா.ஜ.க. – வுடன் சேர்ந்தார்.தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே ஈழப் பிரச்சனைக்காக வெளியில் வந்தார்.சில நாட்களுக்கு முன்பு வரை தி.மு.க.-வுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில் திடீரென்று பல்ட்டி அடித்தார். தாறுமாறாக தி.மு.க- வை விமர்சித்தார்.இப்பொழுதும் விமர்சிக்கிறார்.

அ.தி.மு.க.-வுடனும் கூட்டணி இல்லை என்றும் சொல்லிவிட்டார்.இவர் சார்ந்திருக்கும் ஐவர் அணியிலும் கூட குழப்பம் ஆரம்பித்துவிட்டது.எந்த நம்பிக்கையில் ஐவர் அணி தேர்தல் கூட்டணி அமைக்கும் என்று அறிவித்தார் என்று கேள்வி கேட்கும் அளவிற்குத்தான் இருக்கிறது அவருடைய இந்த முடிவு.

இப்பொழுது அவருடன் இருந்த முக்கியப் பிரமுகர்கள் வெளிநடப்புச் செய்துகொண்டிருக்கிறார்கள்.இன்னும் அவருக்காக அதே குரலில் சத்தம் போடும் ஒரே நபர் மல்லை சத்யாதான்.பல வருடங்களாக வைக்கோவுடன் இருக்கும் எங்கள் ஊர்க்காரர்கூட இப்பொழுது சோர்வடைந்துவிட்டார்.அவரும் பறந்தாலும் பறக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

என்னதான் தன்மானம் , மக்கள் பிரச்சனை என்று ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தாலும் சட்டசபையில் ம.தி.மு.க.-வின் குரல் கேட்காதவரை வைகோவின் அரசியல் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இருக்கப்போவதில்லை.

சரியான கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் ம.தி.மு.க. உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.ஆனால் அதையும் தன் வாயால் கெடுத்துக்கொள்ளும் நிலையில்தான் தற்பொழுது இருக்கிறார் வைகோ.இனிமேல் முடிவெடுத்து அ.தி.மு.க. பக்கம் சென்றாலும் 2011 -ல் கிடைத்த அதே மரியாதைதான் 2016-லிலும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சரியான நேரத்தில் தவறான முடிவெடுக்கும் தலைவர் என்ற பெயர் இன்றைக்கும் வைகோவுக்கு இருக்கிறது.மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்திலும் தாங்கள் போராட வேண்டும் என்பதையும் அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்து.

ஒரு திறமையானவர் வெற்றிப் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கிக்கொண்டே வருகிறார் என்றுதான் என்னால் இப்போதைக்குச் சொல்ல முடிகிறது.காலம் பதில் சொல்லட்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

——- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s