பாவம் விநாயகர்

1பெங்களூரில் நாக்கைக் கடித்துக்கொண்டும் , பாதி நாக்கை வெளியில் தள்ளியபடியும் , இரண்டு கைகளை வானத்தை நோக்கி நீட்டிக்கொண்டும் , இரண்டு கால்களை மடக்கிக்கொண்டும் தன்னிலை மறந்து ரோட்டில் ஆண்கள் ஆடிக்கொண்டு வந்தால் அவர்களுக்குப் பின்னால் விநாயகர் ஊர்வலமாக வருகிறார் என்று அர்த்தம்.

அந்த அளவிற்கு விநாயகரைக் கரைக்க பக்தகோடிகள் பக்திப் பரவசத்துடன் வருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.அவ்வளவு புத்துணர்ச்சியுடன் விழாவை வாரக் கணக்கில் கொண்டாடுகிறார்கள் விநாயகப் பெருமானின் பக்தர்கள் இங்கே.

விநாயகர் சதுர்த்தி முடிந்து 2 முதல் 3 வாரங்கள் வரை விநாயகர் ஊர்வலம் இங்கு நடப்பதுண்டு.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதிகளில் ஊர்வலத்தைக் காணலாம்.தன்னிலை மறந்து ஊர்வலத்தில் ஆடிக்கொண்டே செல்லும் பக்தகோடிகளைப் பார்த்து “பயபக்தி” என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

தினமும் வாக்கிங் செல்லும் பூங்காவிற்குப் பக்கத்தில் இருக்கிறது ஒரு விளையாட்டு மைதானம்.அங்கு தினமும் காலையில் “ஷட்டில்” விளையாட வருபவர்கள் ஏராளம்.வழக்கம்போல் நேற்று காலை விளையாட வந்தவர்களுக்குக் காத்திருந்தது மைதானத்தை சுத்தம் செய்யும் வேலை.

எங்கு பார்த்தாலும் பிளாஸ்ட்டிக் கப்புகள் , வண்ண வண்ண கலர் சாயப் பொடி பொட்டலங்கள் , சில இடங்களில் அந்தப் பொடிகள் சிதறி மண்ணின் கலரையே மாற்றியிருந்தது என இயற்கைக்குப் புறம்பான அத்துனை அட்டகாசங்களும் நடந்து ஒட்டுமொத்தமாக அந்த மைதானமே அங்கிருந்து விநாயகர் ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு நடந்த கொண்டாட்டங்களால் மாசுபடுத்தப்பட்டு இருந்தது.

ஒரு புறம் இயற்கையைக் காக்க மரம் வளர்ப்போம் என்று பேசி வருகின்றோம்.மற்றொரு புறம் இப்படி கடவுள் பெயரைச் சொல்லி இயற்கைக்கு சவால் விடுகிறோம்.நல்ல மனம் படைத்த பலரின் முயற்சிகளும் இப்படிப்பட்டவர்களால் வெற்றி பெறுவதில் சிக்கல் நிறையவே இருக்கிறது.

இறை நம்பிக்கையும் , ஆன்மீகத்தில் ஈடுபாடும் கொண்டவன்தான் நான் என்றாலும் இவர்கள் காட்டும் தெய்வ பக்தியை சத்தியமாக என்னால் ஆன்மீகத்திற்குள் கொண்டுவரவே முடியவில்லை.

விநாயகருக்கு மட்டும் வாய் இருந்து பேசினால் நிச்சயம் அவர் கண்ணில் நீர் வருவதை யாராலும் தடுக்க முடியாது.வாழட்டும் இவர்களின் தெய்வ வழிபாடு.

——- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s