மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு நிலங்கள்

Bதேனியில் இருந்து குமுளி செல்லும் வழியில் ஆறாவது கிலோமீட்டரில் வலது பக்கம் பதினைந்து கிலோமீட்டர் சென்றால் குச்சனூர் எனும் ஊர் வருகிறது.இங்குதான் “சுயம்பு சனீஸ்வரர்” ஆலயம் உள்ளது.திருநள்ளாருக்கு அடுத்தபடியாக இங்குதான் சனி தோஷம் உள்ளவர்கள் சமீப காலமாக அதிக அளவில் வருவதாகச் சொல்கிறார்கள்.திருநள்ளார் அளவிற்கெல்லாம் பெரிய கோவில் இல்லை என்றாலும் சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.

இந்தக் கோவிலைத் தாண்டி குச்சனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் சிறப்பே இயற்கை அன்னை அந்த மண்ணை தன் பக்கம் இழுத்துக்கொண்டதுதான்.மேற்கு தொடர்ச்சி மலையின் அழகின் ஒரு பகுதியை இந்த மண் எடுத்துக்கொண்டது. எங்கு பார்த்தாலும் பசுமைதான்.

நெல் , காய்கறிகள் , தென்னை , வாழை , பலா என விவசாயத்தை அதிகம் நம்பியிருக்கும் பூமி.முல்லைப் பெரியாறு அணைதான் விவசாயத்திற்கான நீரைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.அங்கு சென்ற பிறகுதான் அந்த மக்கள் ஏன் முல்லைப் பெரியாறுக்காகப் போராடுகிறார்கள் என்பது தெளிவானது.விவசாயத்தையே நம்பி இருக்கும் அந்த மண்ணின் மைந்தர்களுக்கு “பென்னி குக்” என்ற மாபெரும் மனிதர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவிற்கு அங்கே பசுமையைக் காண வாய்ப்பிருந்திருக்காது என்றே நம்புகின்றேன்.

தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவுகிறது இந்த அணை.

இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பது வரலாறு. அதனாலேயே “நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்” என்று இன்றளவும் மக்கள் அவரைப் போற்றுகின்றனர்.

பென்னி குக்கின் நினைவாக ஹோட்டல்கள் , கடைகள் ஆகியவற்றிற்கு அவருடைய பெயரை வைத்து அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

இயற்கையான காற்று மற்றும் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் அங்கே செல்பவர்களின் மனதை நிச்சயம் கொள்ளையடித்துவிடும்.நாங்கள் எங்கள் காலை உணவைக் கூட ஒரு பலாத் தோப்பிற்குள் சென்று இயற்கையோடு இணைந்தே அருந்தினோம்.

பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில் இன்னும் ஓரிரு நாட்கள் இருந்துவிட்டுப் போனால் என்ன என்ற எண்ணம் வராமல் இல்லை.அடுத்த முறை சென்றால் தேனி , போடி மெட்டு மற்றும் குமுளியைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்துவிட்டுத்தான் வருவது என்று முடிவு செய்துவிட்டுத் திரும்பும் அளவிற்கு இயற்கை அன்னை மனதைத் திருடிவிட்டாள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

E D C A

——- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s