யார் குற்றவாளி ?

233ஒருவர் குற்றவாளி என்று தீவிர விசாரணைக்குப் பிறகு தெரிந்தால் நீதிமன்றம் தண்டனை கொடுக்க வேண்டும்.குற்றம் செய்தவர் உண்மையிலேயே அந்த குற்றத்தை செய்திருந்தால் நிச்சயம் தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் சமீபகால அரசியலே “தலித்” என்ற வட்டத்திற்குள் சிக்கி அதன் மூலம் லாபமடைந்துகொண்டு வருவதுதான் வேதனையாக இருக்கிறது.

ஏன் எதற்கெடுத்தாலும் “தலித் , தலித்” என்றே பேச வேண்டும் என்று தெரியவில்லை.ஏன் ஒரு பிராமணரை,ஒரு முதலியாரை , ஒரு செட்டியாரை ஒருவர் கொலை செய்திருந்தால் நாமெல்லாம் அதை தட்டிக்கேட்கக்கூடாது என்று இருக்கிறதா என்ன ? அப்படியில்லை.தவறு எங்கு நடந்தாலும் , அதனால் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் நேர்மையான அரசியல்வாதியும் , உண்மையான போராளிகளும் அதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.அதுதான் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய போராட்டமாக இருக்குமே தவிர வெறும் “தலித்” மக்களை வைத்தே அரசியல் நாடகங்கள் நடப்பது ரசிக்கும்படியானதாக இல்லை.பாவம் இந்த தலித் சமூகம்.அரசியல்வாதிகள் ஆட்டிப்படைக்கிறார்கள்.

யுவராஜ் விஷயத்தைப் பொருத்தவரை அவர் இன்னும் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர “குற்றவாளி” கிடையாது.ஆனால் அநீதிக்கு எதிராக போராடுவதாக நினைத்துக்கொண்டு இங்கே பலரும் பதிவிடுவதைப் பார்த்தால் இவர்களே ஒரு தீர்ப்புச் சொல்லி யுவராஜை “குற்றவாளி” என்றே முத்திரை குத்தி தாங்கள் சிறந்த நீதியரசர்கள் என்று சொல்லிவிட்டனர்.

இதில் எத்துனை பேருக்கு கொங்குப் பகுதியைப் பற்றிய சரியான புரிதல் இருக்கும் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக சகட்டுமேனிக்கு கொங்குப் பகுதியும் அங்கே “கவுண்டர்” இனமும் ஜாதி வெறியைத் தூண்டுபவர்கள் என்று தீர்ப்பே எழுதிவிட்டார்கள்.

இவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் சொல்லிவிடுகின்றேன்.ஒரே ஒரு முறை எங்கள் பகுதிக்கு வந்து “கவுண்டர்” இனத்தின் ஒரு திருமணத்தைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்.இந்த இனம் எப்படி அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்துச் செல்கிறது என்பது பிறகு தெளிவாகத் தெரியும்.பலரும் நினைப்பதைப் போல் எல்லாம் இன்றைக்கு யாரும் யாரையும் அடிமைப்படுத்துவதில்லை.கொடுமைப்படுத்துவதில்லை.

“கவுண்டனை வெட்டு கவுண்டச்சியைக் கட்டு ” என்று தைரியமாகப் பேசி வன்முறைகளை தூண்டி விட்டவர்கள் யார் என்று விஷயம் தெரிந்தவர்களுக்குப் புரியும்.உணர்ச்சிவசப்பட்டு வன்முறையை தூண்டும் அளவிற்குப் பேசி அப்பாவி தலித் மக்களை உசுப்பேற்றி விட்டிருக்கிறார்கள் எனலாம்.அது போன்ற வீடியோக்கள் தேவைப்பட்டால் நீங்கள் கூகிள் செய்து பார்த்தால் நிறைய கிடைக்கும்.

சிறுபான்மையினருக்கு சிக்கல் என்பது அனைத்துப் பகுதியிலும்தான் நடக்கிறது.கொங்குப் பகுதியில் மட்டும் இல்லை.இங்கேயும் சில இடங்களில் வேண்டுமானால் நடந்திருக்கலாம்.மற்ற இடங்களைப் போல் எல்லாம் இது ஒன்றும் அமைதியற்ற பூமி எல்லாம் இல்லை.சமீபத்திய நிகழ்வுகள் கொங்கு மண்ணை அப்படித்தான் சித்தரித்து வருகின்றன.மிகவும் தவறான பார்வை என்பது என் கருத்து.

இன்றைக்கு நான் ஊருக்குச் சென்றாலும் எங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் அந்த தலித் ஆறுமுகம் இன்னும் என் கையைப் பிடித்துத்தான் பேசுகிறார்.அவர் தொட்டுவிட்டார் என்று நான் ஒன்றும் பினாயில் போட்டு என் கையைக் கழுவுவதில்லை.நான் மனிதன் என்பதால் என்னைத் தொட்டவரும் ஒரு மனிதர்தான் என்று புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கு நிறையவே அறிவு இருக்கிறது.என்னைப் போன்றுதான் இங்கே அனைவருக்கும் அறிவு நிறையவே இருக்கிறது.கத்தியை எடுத்துக்கொண்டு போய் குத்திக் கொலை செய்துவிட்டு வரும் பூமி அல்ல எங்கள் கொங்கு மண்.

இதே யுவராஜுக்குப் பின்னால் எப்படிப்பட்ட அரசியல் சதி வேலைகள் நடந்திருக்கும் என்று எத்துனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று நானறியேன்.அதற்காக மூன்று மாதங்களாக யுவராஜ் தலைமறைவாக இருந்ததை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் அதை விசாரிக்க காவல் துறை இருக்கிறது , சட்டம் இருக்கிறது.அந்த விசயத்திற்குள் நான் செல்லவில்லை.ஆனால் , என்னால் ஒன்றை மட்டும் அடித்துச் சொல்ல முடியும்.இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமான அரசியல் சதி வேலைகள் நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி , யுவராஜ்தான் கொலை செய்தார் , அவர்தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் பட்சத்தில் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவும் எங்களுக்கு இருக்கிறது.

இதை எல்லாம் விட்டுவிட்டு என்னமோ கொங்கு மண்தான் தமிழகத்தில் ஜாதி வெறியைத் தூண்டுகிறது என்று போலிப் பிரச்சாரம் செய்து வரும் நண்பர்கள் தயவு செய்து உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுங்கள்.இங்கே வந்து என்ன நடக்கிறது என்று முதலில் தெரிந்துகொண்டு பேசுங்கள்.

அன்பிற்கும் , பண்பிற்கும் ,பாசத்திற்கும் பெயர் போன மண் எங்கள் கொங்கு மண்.இன்றைக்கும் அப்படித்தான்.இனிமேலும் அப்படித்தான்.

கிண்டல் செய்பவர்கள் தயவு செய்து தொடர்ந்து அதை செய்து கொண்டிருங்கள்.அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

—— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

One Response to யார் குற்றவாளி ?

  1. 100 % correct nga Anna.. Ketpor ketkattum thootruvor thootrattum..

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s