குழந்தைகளும் ஆசான்கள்தான்

kulandai

குழந்தைகள் நாம் எதிர்பாராத நேரத்தில் நாம் வியக்கும்படி முக்கியமான விஷயங்களை அசால்ட்டாக சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.குழந்தைகளிடம் பேசும்போது அவர்களின் மழலை மொழியை கூர்ந்து கவனிக்க வேண்டும்.பல நேரங்களில் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் நிறைய கிடைத்துவிடும்.என்ன ஒன்று நமக்குப் பொறுமை வேண்டும்.

பக்கத்து வீட்டுப் பையன் ரொம்பவும் குறும்புத்தனம் செய்வதால் கொஞ்சம் அவனை பயமுறுத்தி குறும்பைக் குறைக்கலாம் என்று நினைத்து முகத்தை பயங்கர டெர்ரராக வைத்துக்கொண்டு “டேய் தம்பி , என்னப் பத்தி உனக்குத் தெரியுமா , நா யாருன்னா இந்த பில்டிங்குல கேட்டுப் பாரு , எனக்கு கோவம் வந்துதுன்னு வை , நீ அவ்ளோதான்” என்று அதிரடி ஆக்சனில் இறங்கினால் “அங்கிள் நீங்க யாருன்னும் , உங்களைப் பத்தியும் எனக்கு தெரியாது , கொஞ்சம் நீங்களே சொல்றீங்களா” என்று நக்கலடித்துவிட்டு ச் சென்றுவிட்டான் வெறும் LKG படிக்கும் சிறுவன்.

இன்றைக்கு அவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் குழந்தைகள். வெறுமனே நாம் எதையாவது சொல்லி சமாளிக்க முடியாது.நாம் எதைச் சொல்லிக்கொடுத்தாலும் எளிதில் உள்வாங்கிக்கொள்கிறார்கள்.நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதை மறக்காமல் இருக்க அவர்களாகவே ஒரு ஸ்க்ரீன் ப்ளே ஒன்றை உருவாக்கி அதை அப்படியே மனதில் பதிய வைத்துவிடுகிறார்கள்.சொல்லிக்கொடுத்த நாமே பல மாதங்கள் கழித்து மறந்துவிட்டாலும் , எடுத்துக்காட்டோடு அதை நமக்கு விளக்கி அசத்தும் திறமையும் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு நிறையவே இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று கடந்து சென்றது.உடனே அந்தக் குழந்தை வீட்டிற்குள் அவசரமாகச் சென்றுவிட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியில் வந்தான்.எதற்காக அவ்வளவு அவசரமாகச் சென்றான் என்று தெரியாததால் அவனிடமே கேட்டேன்.

“அங்கிள் , ரோட்டுல ஆம்புலன்ஸ் போனா யாரோ ஒருத்தருக்கு ஒடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறாங்கன்னு அர்த்தமாம்.அதனால இப்படி ஆம்புலன்ஸ் போனா அப்போ நாம அதுல ஒடம்பு சரியில்லாம போறவங்களுக்கு எதுவும் ஆகாம சீக்கிரமா சரியாயிடணும்னு வேண்டிக்கணும்னு எங்க பாட்டி சொல்லிக் கொடுத்திருக்காங்க , அதான் போய் சாமி கும்பிட்டு வந்தேன்” என்றான்.

அவனுடைய பாட்டி அவனை இருந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்யச் சொல்லிக்கொடுத்திருக்கக்கூடும்.இவனோ அதையும் தாண்டி சாமி ரூமுக்கே சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்துவிட்டான்.

எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை.ஆனால் , இந்தக் குழந்தை செய்தது அதைப் பற்றியதல்ல.தனக்கு பாட்டியால் கற்பிக்கப்பட்ட நற்பண்பை மறவாமல் இருந்ததோடு , அப்படிப் பிரார்த்தனை செய்தால் ஆபத்தில் இருக்கும் உயிர் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்ததும்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டியது.இதை சிலர் மூட நம்பிக்கை என்றுகூட சொல்லலாம்.நாம் இங்கு பார்க்க வேண்டியது அந்தக் குழந்தையின் கற்றலும் , அதனை எப்படி அவன் செயல்படுத்தினான் என்பதையும்தான்.

இப்பொழுது ஒவ்வொரு முறை ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கும்போதும் எனக்கு அந்தச் சிறுவனின் ஞாபகம் தவறாமல் வந்துவிடுகிறது. காரணம் அவன் எனக்கும் கற்றுக்கொடுத்துவிட்டுப் போனதுதான்.அதற்காக “ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் வண்டியை நிறுத்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டா போகிறீர்கள்” என்று கேட்டுவிடாதீர்கள்.மனதிற்குள்ளேயே நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்துகொண்டால் போதும்.ஏனென்றால் பலராலும் கைவிடப்பட்ட பல உயிர்கள் நம்பிக்கையோடு செய்த பிரார்த்தனைகளால் பிழைத்த வரலாறும் உண்டு.

ஆக , இதுதான் செய்தி.குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள் , அவர்கள் சொல்வதை காது கொடுத்து அக்கறையோடு கேளுங்கள். அவர்களும் நமக்கு பல நேரங்களில் ஆசானாக இருந்து ஏதாவது கற்றுக்கொடுப்பதை நிச்சயம் நாம் உணரலாம்.

—— கதிர்.

Advertisements
This entry was posted in என் பதிவுகள், நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s