இந்த வருடமும் நானும்

2015

2015 ஆம் வருடம் அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது.ஒரு வருடம் ஓடியதே தெரியவில்லை.இந்த ஒரு வருடத்தில் ஏதாவது சாதித்து இருக்கிறோமா என்றெல்லாம் யோசிக்கவில்லை. செய்யும் வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டு போக வேண்டியதுதான். இதில் சாதனை என்றெல்லாம் எதையும் மனதில் வைத்துக்கொண்டு செய்யத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவன் என்பதால் சாதனை என்ற வார்த்தைக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை.

ஆனால் பொதுவாக இந்த ஆண்டு எப்படி இருந்தது என்று கேட்டால் முதலில் குடும்பத்தைப் பற்றியே சொல்ல வேண்டியிருக்கிறது.பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மகனாக , சகோதரிக்கு ஒரு நல்ல சகோதரனாக , மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக , குழந்தைச் செல்வங்களுக்கு ஒரு நல்ல தகப்பனாக என்று இவை அனைத்திலும் நிச்சயம் சிறந்தவனாகவே இருந்துள்ளேன் என்று மட்டும் நெஞ்சைத் தொட்டு உறுதியாகச் சொல்ல முடிகிறது.அதுவே மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.

மனைவியை கிண்டல் செய்தோ , பெற்றோர்களின் அன்பைப் பற்றியோ , குழந்தைகளின் சேட்டைகளைப் பற்றியோ அவ்வப்போது எழுதியவை எல்லாம் இந்த அன்பின் வெளிப்பாடுதான்.

உத்தியோகத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த சிலர்கூட இப்பொழுது எனக்கு முன்னால் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.இந்த வருடம் அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது.இருந்தாலும் எனக்கு வருத்தம் என்பது அறவே இல்லை.அவர்களை மனதார வாழ்த்த தவறவில்லை.அவர்களை போட்டியாகவும் நினைக்கவில்லை , அவர்களைப் பார்த்து பொறாமைப் படவுமில்லை.அவர்களை முந்திவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் என்னிடம் நிறைய இருக்கிறது.2016 அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுக்கும் என்றும் நம்புகின்றேன்.

எழுத்தில் மட்டும் கடந்த சில மாதங்களாக தடங்கல் வந்துவிட்டது என்பதுதான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது.முன்பைப் போல் இப்பொழுதெல்லாம் அதிகமாக எனது ப்ளாக்கில் எழுத நேரம் கிடைப்பதில்லை.நேரம் கிடைக்கும்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை எழுதுவதைத் தவிர இப்பொழுதெல்லாம் மொக்கைத்தனமான அரசியல் பதிவுகளைப் போட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.

எழுத்து சம்பந்தமாக இந்த வருடத்தில் ஒரு முறை கொடுத்த வாக்குறுதியையும் இன்னும் நிறைவேற்றவில்லை என்பதும் உறுத்தல்தான்.இனி வரும் காலங்களில் எழுத்துப் பணி எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.இருந்தாலும் முடிந்தவரை என் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து எழுத வேண்டும் என்று மட்டும் ஆசை உள்ளது.பார்ப்போம்.

ஆக ,இந்த வருடத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை என்றாலும் மனதளவில் திருப்தி அடைந்தவனாகவே உணர்கின்றேன்.

புது வருட உறுதிமொழி என்றெல்லாம் என்றைக்கும் எடுத்தது கிடையாது. மற்றவர்களோடு நம்மை ஒப்பீடு செய்து கொள்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்ற கொள்கை உடையவன் என்பதால் அதை மட்டுமே வருடா வருடம் புதுப்பித்துக்கொண்டுள்ளேன்.அது மட்டுமே என் வாழ்க்கைக்குப் போதுமானதாகவும் , நான் நானாக வாழவும் உதவுகின்றது.அதுவே மகிழ்ச்சியைத் தருகிறது.

இப்படியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதியபோதும் அதை பொறுமையாகப் படித்து பின்னூட்டமிட்டு கருத்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு புத்தாண்டு வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

—– கதிர்.

Advertisements
This entry was posted in என் பதிவுகள், நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s