கோவில்களும் ஆடைக் கட்டுப்பாடும்

1234

கோவிலுக்குச் செல்பவர்கள் கடவுள் மேல் ஏதாவது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துத்தான் செல்கிறார்கள்.அப்படிச் செல்பவர்கள் யாரும் டைம் பாஸுக்காகச் செல்வதில்லை. டைம் பாஸுக்காக கோவிலுக்குச் செல்வதும் , அங்கு சென்று வேறு விதமான வேலைகளைச் செய்பவர்களும் இருக்கிறார்கள்தான்.நாம் ஆன்மீக நோக்கத்தோடு செல்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.இந்த வகையைச் சார்ந்த பெரும்பாலானவர்களும் நேற்று முதல் அறநிலைத் துறைக்குச் சார்ந்த கோவில்களில் நடைமுறைப்படுத்தியுள்ள ஆடைக் கட்டுப்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள்.

நீதிமன்றம் கொண்டுவந்துள்ள இந்த ஆடைக் கட்டுப்பாட்டு சட்டம் சரியா , தவறா என்ற விவாதம் தேவையற்றது என்றே நினைக்கின்றேன்.காரணம் , என்ன நோக்கத்துடன் கோவிலுக்குச் செல்ல வேண்டுமோ அந்த நோக்கத்துடன் செல்பவர்கள் இந்த கட்டுப்பாட்டைப் பற்றியெல்லாம் கவலைப் பட வாய்ப்பே இல்லை.நம் குறிக்கோள் இறைவனிடம் முறையிட்டு வேண்டி வருவது மட்டுமே என்று நினைத்துச் செல்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

கோவிலுக்குச் சென்று வரும் அந்த ஒரு மணி நேரத்திற்குக் கூட “எங்களுக்கு உரிமை வேண்டும் , புண்ணாக்கு வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கி நேரத்தை வீணாக்கும் ஆட்கள் இங்குதான் அதிகம்.அதிலும் இந்த பெண்ணுரிமை பேசும் போராளிகள் போடும் சத்தம்தான் அதிகம்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஆன்மீகத்தின் மேல் நம்பிக்கை வைத்து கோவிலுக்குச் செல்லும் பெண்கள்தான் அதிக அளவில் வரவேற்றிருக்கிறார்கள்.இளைஞர் கூட்டத்தில் சிலர் வேண்டுமானால் அதிருப்தி தெரிவித்து இருக்கலாம். ஆனால் பெண்கள்தான் அதிக அளவில் வரவேற்றிருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த தீர்ப்பை எதிர்த்து பெண்களுக்காக குரல் கொடுக்கும் பெரும்பாலானவர்கள் யாரென்று பார்த்தால் கோவில் பக்கமே எட்டிப் பார்க்காத பெண்ணுரிமைப் போராளிகள்தான்.தொலைக்காட்சியில் பேசுபவர்களைப் பார்த்தாலே அந்த லட்சணம் தெரிந்துவிடும்.

பொதுவாக இந்த போராளிகளுக்கு எல்லாம் சிறு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஊதி ஊதி பெரிதாக்கி தங்களை வெளிச்சத்தில் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற சுயநலம்தான் அதிகம் இருக்கும்.கோவிலுக்கே செல்லாதவன் எல்லாம் கோவிலுக்குச் செல்பவனுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று யார் இவர்களைக் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டார்கள் என்று தெரியவில்லை.

இது போன்ற விஷயத்திற்காகவெல்லாம் விஜயகாந்த் பட வசனங்களைப் போல் பேசி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு நாம் என்ன நோக்கத்திற்காக இறைவனை நாடிச் செல்கின்றோமோ அதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு சென்றுவிட்டு வர வேண்டியதுதான் என்ற எண்ணம் முதலில் நமக்கு வர வேண்டும்.ஒரு மணி நேரத்திற்கு மட்டும் நாம் உடுத்தும் வேஷ்டியோ , புடவையோ , சுடிதாரோ நம் வாழ்க்கையில் எதையும் குறைத்துவிடவோ , மாற்றிவிடவோ போவதில்லை.

ஒரு மணி நேரத்திற்கு ஜீன்சையோ ,லெக்கின்சையோ போடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.(லெக்கின்ஸ் சம்பந்தமாக குமுதம் பிரச்சனை வந்தபோது லெக்கின்சுக்காக ஆதரவு தெரிவித்தவன் நான் என்பதையும் சொல்லிவிடுகின்றேன்).

ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில்
நம்பிக்கை வைத்து முழு மனதுடன் இறங்கிவிட்டவர்களுக்கு அந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே சிந்தனை இருக்கும்.அப்படி அல்லாதவர்கள் வேண்டுமானால் இப்படி உரிமைப் போராட்டம் நடத்தி டைம் பாஸ் செய்து கொண்டு காலத்தை கடத்துவார்கள்.அவ்வளவுதான்.

—- கதிர்.

Advertisements
This entry was posted in என் பதிவுகள், நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s