ஓசின்னா விடுவோமா நாம

quueeநேற்று மதியம் நான்கு மணி இருக்கும்.லைட்டாக தலைவலி.ஸ்ட்ராங்காக ஒரு டீயைப் போட்டு வருவோம் என்று நினைத்து அலுவலக கேன்டீனுக்குச் செல்ல புறப்பட்டேன்.கேன்டீன் இருக்கும் இரண்டாவது தளத்தில் ஒரே கூட்டம்.அனைவரும் வரிசையில்தான் நின்றார்கள்.

“எதற்காக இங்கே கியூவில் நிற்கிறார்கள்” என்று பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த ஒருவரைக் கேட்க “தெரியலீங்க” என்ற பதிலைக் கொடுத்தார்.பயபுள்ள “தெரியலீங்க” என்று சொன்னாலும் பரவாய் இல்லை , அவரும் போய் அதே வரிசையில் நின்றுகொண்டார் .

ஆக , ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.ஏதோ ஒன்றை இலவசமாகத் தருகிறார்கள் , அதை வாங்கத்தான் இந்தக் கூட்டம் என்று நச்சென்று நடு மண்டைக்கு விளங்கியது.காரணம் , எதற்காக நிற்கிறார்கள் என்று தெரியாமலேயே கியூவில் இடம் பிடித்த புத்திசாலியான அந்த நபர்தான்.

நாட்டில் பாதிப்பேர் நம்மைப் போன்றுதான் இருக்கிறார்கள் என்பது இப்படிப்பட்ட ஆட்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்து நான் திருப்தி அடைந்துகொள்வதுண்டு.ஒருவர் இலவசப் பொருளை வாங்கிவிட்டு , அதை நாம் தவறவிட்டுவிட்டால் ஏதோ ஒன்றை இழந்ததைப் போன்ற பீலிங் வேறு வந்துவிடுகிறது.என்ன செய்வது நம் அரசியல்வாதிகள் நம்மை அப்படி வளர்த்திருக்கிறார்கள்.

வேலையும் டைட்டுதான் என்றாலும் இலவசத்தை தவறவிட முடியுமா என்ன.இரண்டே நிமிடத்தில் டீ குடித்து முடித்துவிட்டு அந்த நபர் நின்றுகொண்டிருந்த அதே வரிசைக்கு நானும் வந்து நின்றுகொண்டேன்.

“அடேய் தம்பி , இப்பவாவது எதுக்காக நீ நிக்கறீன்னு தெரியுமாடா” என்ற ரீதியில் ஒரு கேள்வியை எடுத்துவிட்டேன்.”ஏதோ பீங்கான் காப்பி கப் தராங்களாம் , கேட்டுவிட்டேன்” என்றார் அதே நபர். “எதுக்குய்யா ராசா காப்பி கப்பு” என்பது என் அடுத்த கேள்வி.

“இந்தாளுக்கு லொள்ளப் பாரு , சும்மா வர்றத வாங்க அறிவுப் பூர்வமா கேள்வி கேக்குறான் ” என்று நினைத்திருக்கக்கூடும் அவர்.மீண்டும் அதே “தெரியலீங்க” என்று சற்றே முறைப்புடன் பதிலளித்தார்.சரி , நமக்கு “எதற்கு , ஏன்” என்பதெல்லாம் முக்கியமில்லையே.காப்பி கப்பை வாங்கி விட வேண்டும் என்பதுதானே லட்சியம் என்று நினைத்துக்கொண்டு அதே வரிசையில் நானும் குஷியாக நின்றேன்.

வரிசை மெல்ல நகர்ந்தது.எனக்கு முன்னால் நின்றுகொண்டு இருந்தவர் என்னைப் போலவே “எப்படா கப்பு நம் கைக்கு வரும்” என்ற ஆசையோடு என்னைப் போலவே இரண்டு கால்களையும் மேலே தூக்கி எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தார்.இலவசமாக இருந்தாலும் அதிலும் ஒரு எதிர்பார்ப்பு நமக்கு இருக்கத்தானே செய்கிறது.

வரிசை நகர்ந்து கப் கொடுப்பவரை நெருங்கும்போது எனக்கு முன்னால் இரண்டு பேர்.அங்குதான் நோட்டீஸ் போர்டில் இப்படி எழுதி வைத்திருந்தார்கள். “Please do not use paper cups for tea/coffee . Please use this cup for drinking tea/coffee and save paper , trees and environment” என்று எழுதி வைத்திருந்தார்கள்.

இலவசத்திற்காக ஆசைப்பட்டிருந்தாலும் வாங்கிய அந்தக் கப்பால் ஒரு நல்ல முயற்சிக்காக என் பங்கையும் நான் தரப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சிதான்.இது போன்ற நல்ல முயற்சிகளை லாப நஷ்டம் பார்க்காமல் மற்ற நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தினால் இயற்கையை கொஞ்சமாவது நாம் காப்பாற்றலாம்.

———– கதிர்.

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s